“அவர்களுக்கு யார் என்று காட்டுங்கள்” – ஜெயவர்தனே  பங்களாதேஷ் பயிற்சியாளருக்கு பதிலடி!

0
248
Sl vs Ban

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒரு பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இன்னொரு பிரிவில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.

இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் குழுவில் பாகிஸ்தான் அணி ஆண்டனியை சந்திக்க இருக்கிறது. இதில் எப்படியும் பாகிஸ்தான் அணி தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது ஏறக்குறைய உறுதியான ஒரு விஷயம்தான்.

- Advertisement -

ஆனால் இன்னொரு குழுவில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதனால் இன்று இலங்கை பங்களாதேஷ் அணிகள் இடையே நடக்கும் போட்டியில் யார் பெறுகிறார்களோ அவர்கள் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

ஆசிய கோப்பையில் மிகவும் முக்கியமான ஒரு லீக் போட்டி இது. முக்கியமான போட்டி என்பதால் போட்டி துவங்குவதற்கு முன்பே இரு அணி வீரர்களும் களத்திற்கு வெளியே பரபரப்பாக்கப்பட்டு உள்ளது.

போட்டி குறித்து இலங்கை கேப்டன் டசன்
சாணகா பேசும்பொழுது ” ஆப்கானிஸ்தான் அணியை விட பங்களாதேஷ் அணி எளிதானதுதான். அந்த அணியில் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தாபிஜூர் ரகுமான் இருவரைத் தவிர உலகத்தரமான பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதற்கு பதிலடி தரும் விதமாக பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் ” எங்களிடம் இரண்டு உலகத்தரமான பந்துவீச்சாளர்களாவது இருக்கிறார்கள். ஆனால் இலங்கை அணியில் அப்படி ஒருவர் கூட கிடையாது” என்று கூறியிருந்தார். அதற்கு முன்பாக இரு அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளரின் இந்த கருத்துக்கள் களத்திற்கு வெளியே சூடான நிலையை உருவாக்கியிருக்கிறது.

இந்தநிலையில் இலங்கை அணியின் லெஜெண்ட் பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் கேப்டனுமான மகில ஜெயவர்தனே இலங்கை அணிக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும், பங்களாதேஷ் பயிற்சியாளரின் கருத்துக்கு பதிலடி தரும் விதமாகவும் ஒரு ட்வீட் செய்திருக்கிறார் அதில் ” இலங்கை பந்துவீச்சாளர்கள் உலகத் தரத்தை காட்டுவதற்கும், பேட்டர்கள் களத்தில் யாரென்று காட்டுவதற்கும் இதுதான் நேரம் ” என்று கூறி இருக்கிறார். இதனால் தற்போது இந்தப் போட்டி மென்மேலும் ஒரு பரபரப்பாக மாறி இருக்கிறது!