“நாங்க சேஸ் பண்ண மாட்டோமா?.. வாங்க இப்ப பேசலாம்!” – தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா சவால் பேச்சு!

0
1100
Bavuma

இன்று உலகக்கோப்பை தொடரில் தனது ஆறாவது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான அணியை தென் ஆப்பிரிக்கா அணி எதிர்கொண்டது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இதற்கு முன்பு 5 போட்டிகளில் நான்கு போட்டிகளை தென் ஆப்பிரிக்கா வென்று, ஒரு போட்டியை நெதர்லாந்து அணிக்கு எதிராக தோற்று இருந்தது.

- Advertisement -

இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு வந்த நான்கு வெற்றிகளும் முதலில் பேட்டிங் செய்து வந்தவை. நெதர்லாந்து போன்ற சிறிய அணியுடன் ரன்னை சேஸ் செய்யும் பொழுது அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக 270 ரன்கள் துரத்தி, ஆட்டத்தை இழந்து விடும் நிலையில் இருந்து, பரபரப்பான கட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சேஸ் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

வெற்றிக்குப் பின் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா கூறுகையில் ” இது மிகவும் பரபரப்பான ஒரு போட்டி. இந்த வெற்றியை அணியின் வீரர்கள் அனுபவிக்கிறார்கள். நீங்கள் தென் ஆப்பிரிக்க ரசிகராக இருந்தால் நீங்கள் இதற்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

- Advertisement -

நாங்கள் சேசிங்கில் சரியாக செயல்படவில்லைதான், ஆனால் இப்பொழுது அதைப் பற்றி உரையாடலை நடத்த நன்றாக இருக்கும். தற்பொழுது இதற்கு எங்களிடம் ஒரு ப்ளூ பிரிண்ட் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

நாங்கள் பேட்டிங் மூலம் நல்ல செயல்பாட்டை காட்ட விரும்புகிறோம். ரபடாவுக்கு கீழ் முதுகில் கொஞ்சம் தசை பிடிப்பு இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் வருவார் என்று நம்புகிறேன்.

இன்று ஷாம்சி அவருக்கு சாதகமான சூழ்நிலையில் வந்து மிகச் சிறப்பாக செயல்பட்டார். அடுத்து பேட்டிங்கிலும் வந்து சிறப்பாக செய்தார். அவரது பேட்டிங் பற்றி சமூக வலைதளங்களில் பல மகிழ்ச்சி அடைவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று எங்களுக்கு அது தேவைப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் வந்து கொடுத்தார்!” என்று கூறியிருக்கிறார்!