“என் மகனுக்கு நான் பயிற்சியாளரா மாறுவேனா?” – டிராவிட் சீரியஸான பதில்

0
142
Dravid

இந்திய கிரிக்கெட்டில் எந்த காலத்திலும் நிரப்பப்படாத சில வீரர்களின் இடங்கள் இருக்கும். அதில் இந்திய கிரிக்கெட்டின் சுவர் என்று புகழப்படும் ராகுல் டிராவிட்டின் இடம் முக்கியமானது.

ஒரு பேட்ஸ்மேனாக யாராவது அவரது இடத்தை நிரப்பலாம். ஆனால் அவர் அணிக்காக காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு என்பது ஒரே நேரத்தில் திறமையோடு சேர்த்து வருவது கடினம்.

- Advertisement -

அணி நிர்வாகம் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய சொன்னாலும், அதில் எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே செய்யக் கூடியவர். அதேபோல் கேப்டன் களத்திற்கு உள்ளே வெளியே எப்படியான பொறுப்புகளை கொடுத்தாலும் தட்டாமல் செய்யக்கூடியவர்.

இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்க்கக்கூடிய இன்னிங்ஸ்களை எடுத்துப் பார்த்தால் அதில் ராகுல் டிராவிட்டின் விடாப்பிடியான பிடிவாதமான பேட்டிங் கொண்ட சிறப்பான இன்னிங்ஸ்கள் பல இருக்கும்.

இந்திய கிரிக்கெட்டில் மிகப் புகழோடு மட்டுமில்லாமல் பெரிய நல்ல பெயர் எடுத்தும் இருந்து ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட், மேற்கொண்டு இளையோர் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்று, கிட்டத்தட்ட இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்தார் என்று கூறலாம்.

- Advertisement -

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் நண்பர் சவுரவ் கங்குலியின் வற்புறுத்தல் காரணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது வரை தொடர்ந்து வருகிறார்.

மேலும் அவருடைய மகன் அவரைப் போலவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாகவளர்ந்து வருகிறார். இதனால் தன் மகனுக்கு அவர் பயிற்சியாளராக மாறுவாரா? என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் “நான் என் மகன் சமித்துக்கு எப்பொழுதும் பயிற்சி அளித்தது இல்லை. பெற்றோராகவும் அதே சமயத்தில் பயிற்சியாளராகவும் இருப்பது என்பது மிகவும் கடினம். நான் என் மகனுக்கு அப்பாவாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். ஆனால் அடுத்து இதில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை!” என்று கூறி இருக்கிறார்!