சோயப் மாலிக் BPL மேட்ச் பிக்சிங் சர்ச்சை.. அணி உரிமையாளர் வெளியிட்ட தகவல்

0
55
Malik

40 வயதை கடந்து இன்றும் உலகின் பல டி20 கிரிக்கெட் லீகுகளிலும் விளையாடக்கூடிய வீரராக இருக்கக்கூடியவர் பாகிஸ்தான் அணியின் சோயப் மாலிக். இவருக்கு தற்பொழுது 41 வயதாகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஓய்வு பெற்றுக் கொண்ட இவர் தற்போது வரையில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாமல், பாகிஸ்தானின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார்.

- Advertisement -

மேலும் உலகெங்கும் நடக்கும் பல டி20 கிரிக்கெட் லீக்குகளில் விளையாடுகிறார். போட்டியில் முழுமையாக ஈடுபடுவதற்கான முழு உடல் தகுதியையும் தற்போதும் வைத்திருக்கிறார்.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இவர் பங்களாதேஷ் நடத்தும் பங்களாதேஷ் பிரிமியர் லீக் டி20 தொடரில் பார்ச்சூன் பரிசால் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடினார். மேலும் அதற்கடுத்து அவர் அங்கிருந்து துபாய் புறப்பட்டு சென்றார்.

இந்த மூன்று போட்டிகளில் குறிப்பிட்ட ஒரு போட்டியில் ஒரு ஓவரில் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். மேலும் அந்தப் போட்டியில் ஒரு கிரீஸ் நோ-பால் வீசி இருந்தால். இப்பொழுது இந்த குறிப்பிட்ட பந்துதான் பெரிய பிரச்சனையை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

சோயப் மாலிக் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டு இவ்வாறு செய்ததாக வதந்திகள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டன. இன்று இந்தச் செய்திகள் மிகவும் தீவிரமடைந்தன. இதனால் கிரிக்கெட் களம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

தற்பொழுது சோயப் மாலிக் விளையாடிய அணியின் உரிமையாளர் மிசானூர் ரஹ்மான் இதுகுறித்து கூறும் பொழுது “சோயப் மாலிக் தொடர்பான வதந்திகளுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். அவர் சிறந்த வீரர், எங்களுக்காக சிறந்ததை கொடுத்தார். எனவே இதைப் பற்றி எந்தக் குழப்பமும் செய்யக்கூடாது. எங்கள் அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோற்றது. எனவே நாங்கள் அடுத்து வரவிருக்கும் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் இதுகுறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : “டிராவிட் என் பேட்டிங்கை மாற்றினார்.. அதையே கில்லுக்கும் செய்யனும்” – பீட்டர்சன் சுவாரசிய தகவல்

ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களைக் கடந்த முதல் வீரராக பெஸ்ட் இன்டிசை சேர்ந்த கீரன் பொல்லார்ட் இருந்தார். குறிப்பிட்ட இந்தத் தொடரில் ஏழு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை எட்டி, சோயப் மாலிக் இரண்டாவது வீரராக டி20 கிரிக்கெட்டில் 13,000 கடந்த வீரராக சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.