இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட ஸ்பின்னரை விட தற்போது பாகிஸ்தான் அணிக்கு விளையாடி வரும் முகமது நவாஸ் சிறந்த ஸ்பின்னர் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியிருக்கிறார்.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்தியா பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன. இந்த நிலையில் முதல் இரண்டு சுற்றுகளிலும் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்திருக்கிறது.
இந்த ஆசியக் கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் சுழல் பந்துவீச்சு யூனிட் மிகவும் வலிமையாக கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தங்கள் அணியின் முகமது நவாஸ் உலகின் சிறந்த சுழல் பந்துவீச்சாளர் என்று கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் இந்திய ஸ்பின்னர்கள் அற்புதமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்க, கடைசி மூன்று போட்டிகளில் பாகிஸ்தான் முகமது நவாஸ்க்கு இரண்டு போட்டிகளில் பந்து வீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மீண்டும் இந்த சர்ச்சையை சோயப் அக்தர் உருவாக்கி இருக்கிறார்.
இந்திய அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் இதுவரையில் 13 ஓவர்கள் பந்து வீசி 6.15 ரன் எக்கானமியில் 4 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். அதே சமயத்தில் பாகிஸ்தானில் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் முகமது நவாஸ் 11 ஓவர்கள் பந்துவீசி 7.36 எக்கானமியில் மொத்தம் இரண்டு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பைனல் சாதாரணமா இருக்காது.. பாக் அணிக்கு எதிரா இந்திய அணி இதத்தான் முதல் வேலையா செய்யணும் – இந்திய முன்னாள் வீரர்
புள்ளி விபரம் இப்படி இருந்தாலும் சோயப் அக்தர் இருவர் குறித்து பேசும் பொழுது “முகமது நவாசை விட அக்சர் படேல் சிறந்த சுழல் பந்துவீச்சாளர் கிடையாது. அக்சர் நல்ல சுழல் பந்துவீச்சாளர். அவருக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. காரணம் அணி நிர்வாகம் அவரை ஆதரிக்கிறது; அவருக்கு அணியில் ஒரு நிரந்தர இடம் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.