எங்க வீரர்களுக்கு இந்திய வீரர்களின் திறமை இல்ல.. கூடவே மூளையும் சுத்தமா இல்ல – அக்தர் விமர்சனம்

0
9946
Akthar

பாகிஸ்தான அணியின் முன்னாள் வேதப்பந்துவீச்சாளர் தங்களுடைய அணி நிர்வாகம் மூளையற்றதாக இருப்பதாகவும், இதன் காரணமாக வீரர்களும் அப்படியே இருப்பதாகவும் மிகக் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோற்றது இதற்கு காரணமாக இருக்கிறது.

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடந்த பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. மேலும் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம்.

- Advertisement -

மீண்டும் தலை தூக்கிய அதே பிரச்சனை

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் மிகவும் மந்தமாக மெதுவாக பேட்டிங் செய்வது அந்த அணிக்கு பிரச்சனையாக மாறுகிறது என்று தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. நேற்றைய போட்டிகள் பாபர் அசாம் ஓரளவுக்கு நல்ல முறையில் விளையாடி வெளியேறினார். ஆனால் இன்னொரு மூத்த வீரர் முகமது ரிஸ்வான் மீண்டும் மெதுவாக விளையாடி அணி ரன் வேகத்திற்கு தடை போட்டார்.

மேலும் ரன் வேகத்தை அதிகரிக்க வேண்டிய இடத்தில் ஆட்டம் இழந்து அணிக்கு பின்னடைவை உருவாக்கினார். அங்கிருந்து பாகிஸ்தான் அணி 241 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு விராட் கோலி இறுதிவரை இருந்து 111 பந்தில் சதம் அடிக்க, இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்று ஏறக்குறைய அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

- Advertisement -

மூளையற்ற அணி நிர்வாகம்

இதுகுறித்து சோயப் அக்தர் பேசும்பொழுது “இந்தியாவுக்கு எதிரான போட்டியில் என்ன நடக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் எந்தவித ஏமாற்றமும் இல்லை. இந்த அணி நிர்வாகத்தால் 5 பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய முடியாது. உலகெங்கும் ஆறு பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். ஆனால் இவர்கள் இரண்டு ஆல்ரவுண்டர்களை அங்கு வைத்துக் கொள்கிறார்கள். இது மூளையற்ற மற்றும் துப்பு இல்லாத நிர்வாகம்”

இதையும் படிங்க : கோலி செஞ்ச வேலைக்கு.. யாரும் அப்பீல் பண்ணல.. இல்லனா 41 ரன்னுக்கே அவுட் ஆயிருப்பாரு – சுனில் கவாஸ்கர்

“நாங்கள் எங்கள் வீரர்களை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அணி நிர்வாகம் போலவே அவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. விராட், ரோஹித் மற்றும் கில் போன்ற இந்திய வீரர்களிடம் இருக்கும் திறமை இவர்களிடம் இல்லை. வீரர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் தெளிவான திசை எதுவும் கிடையாது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்கள் யாருக்குமே தெரியாது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -