சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் லீக் தொடரின் 5வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி 41 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது, பந்தை தடுத்த விதம் குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்.
விராட் கோலி செய்த வேலை
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 241 ரன்கள் குவித்தது. அதற்கு பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாட ஆரம்பித்தது. சரியாக இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது 21வது ஓவரை ஹாரிஸ் ராப் வீசினார். அதனை எதிர்கொண்ட கோலி எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்து விட்டு சிங்கிள் எடுக்க ஆரம்பித்தார். பந்து த்ரோவாக விராட் கோலியை நோக்கி வீசப்பட்ட நேரத்தில் அவர் மறுமுனையை அடைந்தது மட்டுமல்லாமல் ஸ்டம்ப்களையும் தாண்டினார்.
இந்த நிலையில் க்ரீஸ் லைனை தாண்டி வந்த பந்தை விராட் கோலி கைகளால் தடுத்து நிறுத்தினார். அதனைப் பார்த்த பாகிஸ்தான் வீரர்களும் மூன்றாவது நடுவரிடம் இது குறித்து அப்பீல் செய்யவில்லை. டிவி ரிப்ளேவில் பார்த்தபோது விராட் கோலி நான் ஸ்டிக்கர் லைனை அடைந்ததோடு அவரை நோக்கி வந்த பந்தை கைகளால் தடுத்து நிறுத்தி இருந்தது தெளிவாக தெரிந்தது. இது குறித்து அப்போதே பாகிஸ்தான் வீரர்கள் நடுவரிடம் முறையிட்டு இருந்தால் விராட் கோலி 41 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறி இருப்பார்.
அதிர்ஷ்டவசமாக தப்பினார்
கிரிக்கெட் விதிப்படி, ‘விளையாடிக் கொண்டிருக்கும் போது பீல்டரின் அனுமதி இல்லாமல் ஒரு பேட்ஸ்மேன் பந்தை பேட்டில் தடுத்து நிறுத்தினாலோ அல்லது உடலின் எந்த பகுதியில் நிறுத்தும்படி செய்தாலோ அது கிரிக்கெட் விதிப்படி தவறாகும். உடனடியாக அந்த வீரர் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்’. எனவே நேற்று பாகிஸ்தான் வீரர்கள் விராட் கோலிக்கு அவ்வாறு செய்திருந்தால் அவர் ஆட்டம் இழந்து வெளியேறி இருப்பார். இந்த சூழ்நிலையில் இதுகுறித்து சுனில் கவாஸ்கர் சில கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க:இந்திய அணிக்கு எதிரா.. இதை செய்ய நினைத்தோம்.. ஆனா கோலி கேமையே மாத்திட்டாரு – பாக் கேப்டன் வருத்தம்
இது குறித்து அவர் கூறும் போது
” விராட் கோலி பந்தை தனது கையால் தடுத்து நிறுத்தினார். பாகிஸ்தான் வீரர்கள் இதுகுறித்து மேல்முறையீடு செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் விராட் கோலி அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறி இருப்பார். அந்தக் கட்டத்தில் யாரும் பின்வாங்காமல் இருந்திருந்தால் இது நிச்சயமாக நடந்திருக்கும். பந்து முன்னேறி வந்து கொண்டிருக்கும் போது விராட் கோலி அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அதிர்ஷ்டவசமாக யாரும் மேல்முறையீடு செய்யாததால் அவர் தப்பினார்” என்று கூறியிருக்கிறார்.