கேதர் ஜாதவ் தம்பி போல் விளையாடிய சி எஸ் கே வீரர்.. தோல்விக்கு முக்கிய காரணம் ஆனார்!

0
281

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரும் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் அணிடம் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 178 ரன்கள் எடுத்த நிலையில் அதனை குஜராத் அணி கடைசி ஓவரில் எளிதாக எட்டியது.

- Advertisement -

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் தோனி, தாங்கள் கூடுதலாக கொஞ்சம் ரன்கள் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் எனக் கூறியிருந்தார். இதற்கு காரணம் இந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 10 ஓவர்களில் 100 ரன்களை எடுத்திருந்தது. இதனால் சிஎஸ்கே எளிதாக 200 ரன்களை தாண்டும் என கருதப்பட்டது.

இந்த நிலையில் ஆட்டத்தில் 13 வது ஓவரில் களத்துக்கு வந்த ஆல்ரவுண்டர் சிவம் துபே ரன் சேர்க்க தடுமாறினார். அதுவரை சிஎஸ்கே வின் ரன் குவிப்பு வேகம் அதிகமாக இருந்த நிலையில் சிவம்  துபேவால் அது அப்படியே சரிவை நோக்கி சென்றது. இதில் சிவம் துபே மட்டும் நன்றாக விளையாடி இருந்தால் சிஎஸ்கே அணி பெரிய இலக்கை எட்டிருக்க கூடும்.

சிவம் துபி ஆமை வேகத்தில் விளையாடியதால் மற்ற பேட்ஸ்மன்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டு அவர்கள் தங்களது விக்கெட்டுகளை இழக்க நேரிட்டது. சிவம் துபேவின் ஆட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு அடித்த ஆட வேண்டிய முக்கிய கட்டத்தில் சிக்ஸர் அடிப்பது போல் இறங்கி வந்து கட்டையை போட்ட கேதர் ஜாதவ் இன்னிங்ஸை நினைவு படுத்தியதாக சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிவம் துபேவுக்கு பதிலாக ஜடேஜா அல்லது தோனியை களத்துக்கு வந்திருந்தால் சிஎஸ்கே அணி முதல் ஆட்டத்தில் எளிதாக வென்று இருக்கலாம் எனவும் அவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

- Advertisement -

இதேபோன்று பந்து வீச்சில் இம்பாக்ட் வீரராக உள்ளே நுழைந்த துஷார் தேஷ்பாண்டேவும் குஜராத் அணி வீரர்களுக்கு ரன்களை வாரி வழங்கினார். மூன்று புள்ளி இரண்டு ஓவர்களை மட்டுமே வீசியவர் 50 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியில் அனுபவம் நிறைந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரிய குறையாக பார்க்கப்படுகிறது.
மேலும் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தும் தோனி அவர்களை தேர்ந்தெடுக்காமல் விட்டதும் புரியாத புதிராக உள்ளது.