சில வாரங்களுக்கு முன்னால் நடந்த முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடர் முழுக்க இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷிவம் துபே இடம் பெற்று விளையாடினார். மேலும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை எப்படி ஆதரித்தார்கள்? என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆரம்பப் போட்டிகளில் விளையாடிய பொழுது சிவம் துபே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சுமையாக இருக்கிறார் என்றும் அவருடைய இடத்திற்கு சஞ்சு சாம்சங் விளையாடலாம் இல்லை ரிங்கு சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என நிறைய விமர்சனங்கள் வெளியில் இருந்து வந்தது.
இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அணிக்கு தன்னுடைய பங்களிப்பை கொடுக்க ஆரம்பித்தார். இறுதிப் போட்டியில் மிகவும் நெருக்கடியான நிலையில் கடைசி கட்டத்தில் வந்து 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு இவரது ஆட்டம் உதவியாக இருந்தது.
இது குறித்து ஷிவம் துபே கூறும் பொழுது “எனக்கு இந்த சூழ்நிலைகள் சவால் ஆனதாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. இது என்னுடைய மனவலிமை மற்றும் விடா முயற்சிக்கான பரிசோதனையாகவும் இருந்தது. எங்கள் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு நம்ப முடியாத அளவுக்கு உறுதியாக சிறப்பாக இருந்தது. அவர்கள் என்னைத் தொடர்ந்து ஆதரித்து ஊக்குவித்து பாசிட்டிவாக இருக்க உதவி செய்தார்கள்.
எனது திறமைகள் மற்றும் அவர்களுடைய வழிகாட்டுதல்கள் எனக்கு என் மீது நம்பிக்கை கொள்வதற்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது.இந்த அனுபவம் என்னை வலிமையாகவும், எதிர்காலத்தில் அணியின் வெற்றிக்கு மேம்படுத்தவும் பங்களிக்கவும் உதவி செய்திருக்கிறது.
இதையும் படிங்க : வெறும் 4.2 ஓவர்.. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை.. இங்கிலாந்து அதிரடி ரெக்கார்ட்
எனது அணியின் சக வீரர்கள், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆதரவு என்னை சிறப்பான மனநிலையில் இருப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது. மேலும் ரசிகர்களின் ஆதரவும் சிறப்பானதாக இருந்தது. இவ்வளவு பெரிய மேடையில் நாட்டிற்காக பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய விஷயம். இதற்கெல்லாம் நான் எப்பொழுதும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.






