இன்று இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து நாட்டிங்ஹாம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடி பேட்டிங்கில் அசத்தலான சாதனையை செய்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து சென்று இருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தற்போது தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கு கை மேல் பலனாக இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி விக்கெட்டை உடனடியாகக் கைப்பற்றியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த சந்தோசம் அடுத்தடுத்த பந்துகளிலேயே முடிந்து போனது.
இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த பென் டக்கெட் மற்றும் துணை கேப்டன் ஒல்லி போப் இருவரும் சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எந்த கவலையும் இல்லாமல் அடித்து நொறுக்கினார்கள். டி20 கிரிக்கெட் போல மிக வேகமாக ரன்கள் வரத் துவங்கியது. இங்கிலாந்து ரசிகர்களுக்கு பேட்டிங் விருந்து நடந்தது.
அதிரடியாக விளையாடிய இந்த இங்கிலாந்து ஜோடி வெறும் 4.2 ஓவர்களில் 50 ரன்கள் எட்டியது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 ரன்கள் எடுத்த அணி என்கின்ற சாதனையையும் இந்த ஜோடி படைத்தது. இந்தச் சாதனையில் முதல் மூன்று இடங்களில் இங்கிலாந்து அணியே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 59 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒல்லி போப் ஆட்டம் இழக்காமல் 53 பந்தில் 31 ரன் எடுக்க, இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 19 ஓவரில் 105 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : ஆறு பந்துக்கு ஒரு தடவ.. பவுலர்ஸ் ஏன் இப்படி பண்றாங்க.. பேட்ஸ்மேன் பாவம் இல்லையா- கவாஸ்கர் பேச்சு
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக முதல் 50 ரன்களை எட்டிய அணிகள் :
இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் – 4.2 ஓவர் – 2024
இங்கிலாந்து – சவுத் ஆப்பிரிக்கா – 4.2 ஓவர் – 1994
இங்கிலாந்து – இலங்கை – 5 ஓவர் – 2002
இலங்கை – பாகிஸ்தான் – 5.2 ஓவர் – 2004
இந்தியா – இங்கிலாந்து – 5.3 ஓவர் – 2008
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 5.3 ஓவர் – 2024






