“சிவம் துபே முன்ன மாதிரி இல்ல .. இதுமட்டும் நடந்துட்டா அவர புறக்கணிக்க முடியாது” – ஹர்பஜன் பேச்சு

0
379
Shivam

நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பஞ்சாப் மகாலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பந்துவீச்சின் போது இரண்டு ஓவர்கள் பந்துவீசி 9 ரன்கள் மட்டும் தந்து சிவம் துபே ஒரு விக்கெட் கைப்பற்றினார். அடுத்து பேட்டிங் செய்ய வரும்பொழுது 40 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் சிவம் துபைவை வாங்கியதில் இருந்து, அவருடைய செயல் திறன் அதிகரித்து இருக்கிறது. அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையும் மாறி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் தற்போதைய சூழ்நிலையில் மாற்றுவீரரே இல்லாத வீரராக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. இன்று அவருடைய இடத்துக்கு மாற்று வீரராக சிவம் துபே பார்க்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

அவருடைய பலம் என்னவென்று சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு ஆட்டத்தை எப்படி அணுக வேண்டும் என்கின்ற முறையும் அவருக்கு தெளிவாகப்பட்டிருக்கிறது. இந்த இரண்டும் அவரது செயல் திறனை அதிகரித்து அதன் மூலமாக, அவரது தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

நேற்றைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில்இதை வெளிப்படையாக பார்க்க முடிந்தது. குறிப்பாக பேட்டிங்கில் வந்ததும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கொஞ்சம் பொறுமை காட்டி, பின்பு ஒரு பார்ட்னர்ஷிப் உருவாக, தேவையான நேரத்தில் சரியான பந்துகளை அடித்து ரன்கள் கொண்டு வந்தார். தன்னால் ரன்கள் எடுக்க முடியும் என்று நம்பியதால் ஆட்டத்தை நிதானமாக அணுகியதாகவும் கூறினார்.

இந்த நிலையில் சிவம் துபாய் வளர்ச்சி பற்றி பேசி உள்ள ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “சிவம் துபேவிடம் நான் பார்த்த ஒரு பெரிய மாற்றம் அவருடைய பந்துவீச்சு வேகம். அவருடைய பந்துவீச்சு வேகம் தற்பொழுது அதிகரித்திருக்கிறது. தற்போது பந்துவீச்சு நல்ல முறையில் மேம்பட்டு இருக்கிறது.

மேலும் அவர் தனது உடல் தகுதியில் நிச்சயம் வேலை செய்திருக்கிறார். இந்தியா நீண்ட காலமாக தேடும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அவரால் வர முடியும். மீதமுள்ள போட்டிகளில் சிவம் துபே ரன்கள் எடுத்தால், அவரைப் புறக்கணிப்பது மிகவும் கடினம்” என்று கூறி இருக்கிறார்!