ஜிம்பாப்வே தொடர்.. நிதீஷ் குமார் காயம்.. சிஎஸ்கே வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. முக்கிய வாய்ப்பை பயன்படுத்துவாரா?

0
753
Nitish

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும் இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்டிருந்த புதுமுக மிதவேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி காயம் அடைந்து வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் அவருக்குப் பதிலாகப் புதிய வீரரை இந்திய தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது.

இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் விளையாடும் ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மீதம் இளம் வீரர்களுக்கும் புதுமுக வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இளம் மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 303 ரன்கள் எடுத்தார். மேலும் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு அவரை இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்க விரும்புகிறது.

இப்படியான நிலையில் அவர் காயம் அடைந்து தொடரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய தேர்வுக்குழு அவருடைய இடத்திற்கு தற்போது டி20 உலக கோப்பையில் விளையாடிக் கொண்டிருக்கும் சிவம் துபே அறிவித்திருக்கிறது.

- Advertisement -

அடுத்த டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் 2026 ஆம் ஆண்டு நடக்கிறது. எனவே ஹர்திக் பாண்டியா இடத்திற்கு மாற்று வீரர்களைக் கண்டுபிடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருகிறது. ஏனென்றால் அவருக்கு மாற்று வீரரே இல்லை. இதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தடுமாறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எங்க இங்கிலாந்து இந்தியாவை தோற்கடிக்கிறது கஷ்டம்.. அந்த ஒரு வீரரை ஒன்னும் செய்ய முடியாது – காலிங்வுட் கணிப்பு

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலும் சிவம் துபே பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. எனவே அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால், மேற்கொண்டு அடுத்தடுத்த டி20 தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். இல்லையென்றால் இந்தியாவில் அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகின்ற காரணத்தினால், திலக் வர்மா போன்ற சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை பேட்டிங்கில் ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வர வாய்ப்புகள் இருக்கிறது. சிவம் துபே இந்த வாய்ப்பை பயன்படுத்துவாரா? என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -