நான் கோலி ரோஹித்தை விட சிறந்தவன்.. அப்படி நெனச்சதால எனக்கு இந்த விஷயம் நடந்துச்சு – ஷிகார் தவான் பேட்டி

0
69

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடி முடித்த பின்னர் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. கடைசியாக 2013 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் சிகார் தவான் அதில் ஏற்பட்ட அனுபவம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய தவான்

2011ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையை இந்திய அணி வென்று முடித்த பின்னர், சீனியர் வீரர்கள் அணியை விட்டு விலகினார்கள். அதற்குப் பிறகு மகேந்திர சிங் தோனி தலைமையில் இளம் வீரர்கள் அதிரடியாக செயல்பட்டு 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தார்கள். அந்தத் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சிகார் தவான் தனது அற்புதமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.

இந்தத் தொடரில் விளையாடிய தவான் 5 ஆட்டங்களில் 91 ரன்கள் சராசரியோடு 363 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் இந்த தொடக்க வீரர் நிலையாக இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன்பாக 2013 ஆம் ஆண்டு விளையாடிய போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

விராட் ரோஹித்தை விட சிறந்தவன்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது ஒரு மிகப்பெரிய சாதனை. என் வாழ்க்கையில் அந்த நிகழ்வு பெரிய ஒன்றாகும். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் நான் சதம் அடித்த போது அது எனக்கு பெரிய நிம்மதியாக இருந்தது. ஏனென்றால் அது எனது மறுபிரவேசப் போட்டியாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் ஒரு நாள் அணிக்கு தேர்வானேன்.

இதையும் படிங்க:என்னை விட விராட் கோலி இந்த விஷயத்தை சிறப்பாக செய்வார்.. முழு நம்பிக்கை உள்ளது – எம்எஸ் தோனி பேட்டி

நான் பதட்டமாகவும் உற்சாகமாகவும் இருந்தேன். அதே நேரத்தில் நம்பிக்கையோடும் இருந்தேன். எங்களிடம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருந்த போதிலும் நான்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். அப்போது என்னுடைய தன்னம்பிக்கை உயர்ந்தது. நானும் அந்த நிலையைச் சேர்ந்தவன் என்று உணர்ந்தேன். பின்னர் நான் ரன்கள் எடுத்து சாதனைகளை முறியடிக்க தொடங்கிய போது, அந்த போட்டியில் நினைத்தது நிஜமாகிவிட்டது. அது ஒரு சிறந்த உணர்வு மக்கள் என்னை அடையாளம் காண தொடங்கினார்கள். அது என் வாழ்க்கையை மாற்றியது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -