ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அடுத்ததாக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் முன்னணி 8 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி
இந்திய முன்னாள் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி டி20 உலக கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மூன்று வடிவ தொடரையும் வெற்றி பெற்று கொடுத்த ஒரே கேப்டன் ஆவார். அதற்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதற்குப் பிறகு டெஸ்ட் கேப்டன்ஷிப் பொறுப்பு விராட் கோலியிடம் சென்றது. பின் சில வருடங்களிலேயே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் தோனி ஓய்வு பெற அதற்குப் பிறகு முழுநேர கேப்டனாக விராட் கோலி மாறினார்.
ஆனால் விராட் கோலி தலைமையில் ஒரு ஐசிசி தொடர் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மகேந்திர சிங் தோனியை விட விராட் கோலி வெற்றி சதவீதத்தில் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலியின் தலைமையில் தான் 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பையை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
என்னை விட கோலி சிறப்பானவர்
இதுகுறித்து அவர் விரிவாகக் கூறிய போது “சிறப்பான திறமை இப்போது இந்திய அணியிடம் இருக்கிறது. இந்திய அணியிடம் அனுபவமான வீரர்களும் இருக்கிறார்கள். எண்ணிக்கையை பொருத்தவரை விராட் கோலியும், இந்த அணியும் என்னைவிட அதிக ஆட்டங்களில் வெற்றி பெறுவார் என்று நான் நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஐந்து ஆட்டங்களில் விளையாடும் போது அணியில் இல்லாத போது, தங்களுக்கு கிடைக்காத இரண்டு ஆட்டங்கள் பற்றி எப்போதும் கவலைப்படுவதை நாம் அடிக்கடி பார்த்து இருக்கிறோம்.
இதையும் படிங்க:மக்கள் என்னை இப்படி தப்பா பேசும் போது வெறுப்பும் வலியும் ஏற்படுகிறது – பாக் ஷாகின் அப்ரிடி வேதனை
விராட் கோலியை பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக பயன்படுத்தி முன்னேற நினைத்தார். அதனால்தான் விராட் கோலி இப்போது இவ்வளவு வெற்றிகரமான வீரராக இருக்கிறார்” என்று பேசி இருக்கிறார். விராட் கோலி கேப்டன்சியை விட்டு விலகிய நிலையில் அதற்குப் பின்னர் கேப்டனாக பொறுப்பேற்றார் ரோஹித் சர்மா சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது தலைமையில் தான் இந்திய அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் விளையாட உள்ளது.






