விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ஷிகர் தவான் இரண்டு ஐபிஎல் சாதனைகள் ; பஞ்சாப் ரன்கள் குவிப்பு!

0
354
Shikardhawan

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வெற்றிகரமான டி20 லீக் ஐபிஎல் தொடரின் பதினாறாவது சீசனின் எட்டாவது போட்டி பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கவுஹாத்தி மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது!

இந்த போட்டியில் முதலில் டாசை இழந்து பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் பொறுமையான ஆங்கர் ரோல் செய்ய, இன்னொரு துவக்க ஆட்டக்காரராக வந்த இளம் வீரர் பிரப்சிம்ரன் ஆரம்ப முதலே அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

அதிரடியாக தொடர்ந்து விளையாடிய பிரப்சிம்ரன் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்து 34 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த ராஜபக்சே ஷிகர் தவான் அடித்த பந்தை கையில் வாங்கி காயமடைந்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து இளம் வீரர் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா களத்திற்கு வந்து அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார். நேரம் போகப் போக ஷிகர் தவானும் சூழ்நிலையை உணர்ந்து அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். 38 பந்துகளில் அவருக்கு அரை சதம் வந்தது. இது அவருக்கு ஐபிஎல் தொடரில் 50 ஆவது அரை சதம் ஆகும்.

ஐபிஎல் தொடரில் அதிகபட்ச அரை சதங்களை அடித்தவராக டேவிட் வார்னர் 164 இன்னிங்ஸ்களில் 60 அரை சதம் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்து 224 இன்னிங்ஸ்களில் 50 அரை சதங்களை அடித்து விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருந்தார். தற்பொழுது 208 இன்னிங்ஸ்களில் 50 அரை சதத்தை அடித்து விராட் கோலியை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு சிகர் தவன் முன்னேறி இருக்கிறார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி 200 ரங்களை தாண்டும் என்று இருந்த நிலையில் நான்கு விக்கெட்டுகளுக்கு தற்பொழுது 197 ரன்கள் எடுத்திருக்கிறது. ஜிதேஷ் ஷர்மா 27 ரன்கள், சிக்கந்தர் ராஸா 1 ரன் எடுத்து வெளியேற அடுத்து வந்த ஹிட்டர் 10 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய கேப்டன் ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் 86 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் மற்றும் ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி சிக்கனமாக ரன்கள் தந்து முறையே ஒரு விக்கெட், இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இந்த ஆட்டத்தில் மேலும் ஒரு சாதனையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை சிகர் தவன் படைத்திருக்கிறார்.