இந்திய கிரிக்கெட்

இந்திய வீரர்கள் பிரச்சனைல மாட்டாத வரை.. பிசிசிஐ போட்ட இந்த ரூல் தப்பில்ல – ஷிகார் தவான் பேட்டி

பிசிசிஐ சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கட்டளையை சர்வதேச வீரர்களுக்கு விதித்தது. அதன்படி உள்நாட்டு தொடரான ரஞ்சி டிராபி தொடரில் இந்திய வீரர்கள் விளையாடினர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகார் தவான் பிசிசிஐ விதித்த விதிமுறை குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

பிசிசிஐ விதித்த நிபந்தனை

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை மிக மோசமான முறையில் இழந்தது சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி, அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான செயல் முறையை வெளிப்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் பிசிசிஐ வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், அதில் முக்கிய விதியாக சர்வதேச வீரர்கள் உள்நாட்டு தொடரில் கட்டாயம் விளையாட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது. இந்த சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தூதராக இடம்பெற்ற இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சிகார் தவான் பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு விதித்த விதிமுறை நல்லதுதான், ஆனால் அவர்களுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டியது கட்டாயம் என்று சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கருத்து

இதுகுறித்து தவான் விரிவாக கூறும்போது “இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு விதித்த நிபந்தனை ஒரு நல்ல முடிவாகும். இருப்பினும் அவர்கள் மீது அதிக பணிச்சுமையை ஏற்றக் கூடாது. இந்திய மக்கள் அதனை நிச்சயம் கண்காணிப்பார்கள். தற்போதைய சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி எப்படி உள்நாட்டு தொடரில் டெல்லி அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடினார் என்பதை பார்க்க வேண்டும். அது உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கு மிகவும் நல்லது. அப்போது மைதானம் பார்வையாளர்களாலும் ரசிகர்களாலும் நிரம்பியிருந்தது.

இதையும் படிங்க:ஜடேஜா அக்சாரை அந்த 2 பேருடன் ஒப்பிடுவதா.? ரிஸ்வான் கனவிலும் நினைத்து பார்க்கக் கூடாது – ஆகாஷ் சோப்ரா பதிலடி

அதேபோல இந்திய வீரர்களுக்கு போதுமான ஓய்வு கொடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். சுப்மான் கில் இந்திய அணிக்கு சிறப்பாக விளையாட வருகிறார். அவர் நிச்சயம் இந்திய அணியின் கேப்டனாக மாறுவார். இப்போது அவர் துணை கேப்டனாக இருக்கும் நிலையில் கேப்டனுக்கான தகுதியில் விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் மேலும் அவர் அடுத்த கேப்டனாக மாறுவார்” என்று தெரிகிறது” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by