இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் வெற்றி பெற்று தற்போது அரை இறுதிக்கு முன்னேறுவதை உறுதி செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் கூறிய கருத்துக்கு இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சரியான பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார்.
முகமது ரிஸ்வான் ஒப்பீடு
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 241 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர்களாக கருதப்படும் அக்சார் பட்டேல் 10 ஓவர்களில் 49 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மற்றும் ரவீந்திர ஜடேஜா 7 ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். அதற்குப் பிறகு விளையாடிய இந்திய அணி விராட் கோலியின் அபாரமான சதத்தின் உதவியோடு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் போட்டி நடைபெற்ற பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் ஐந்தாவது பந்துவீச்சாளராக யாரேனும் ஒருவரை உபயோகப்படுத்தி இருந்தால் அது பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்திருக்குமா? என்று கேட்டபோது, 5 சிறப்பு பந்துவீச்சாளர்களோடு விளையாடுவதற்கு தங்களால் முடியாது எனவும், அது பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கை பலவீனப்படுத்தும் எனவும் கூறி இருந்தார். மேலும் இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களான அக்சார் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை பாகிஸ்தான் அணியின் பகுதி நேர பவுலர்களான சல்மான் அலி ஆகா மற்றும் குஷ்தில் ஷா ஆகியோருடன் ஒப்பிட்டு பேசியதற்கு ஆகாஷ் சோப்ரா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
நினைத்துக்கூட பார்க்க முடியாது
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் போது ” இந்திய அணியின் ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேல் போல பாகிஸ்தான் அணியின் சல்மான் ஆகா மற்றும் குஸ்தில் ஷா ஆகியோர் ஒரே மாதிரியானவர்கள் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் நம்புகிறார். இந்த விஷயங்களை நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்த வீரர்களின் புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தாலே தெளிவாக தெரியும்.
இதையும் படிங்க:பாபர் அசாம் ஏமாற்று வீரர்.. கோலியின் ஹீரோ யார்னு தெரிஞ்சா இவங்கள கம்பர் பண்றதயே விடனும் – சோயப் அக்தர்
போட்டிகள் ஒருதலைபட்சமாக இருந்தாலும் பாகிஸ்தான் அணி இப்படியே இருக்க வேண்டும். தோல்விக்குப் பிறகு கூட பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் உள்ளடக்கம் மற்றும் பகுப்பாய்வு உயர்தரமாக இருக்கிறது” என்று கிண்டல் அளிக்கும் விதமாக ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.






