“நான் உறுதியா நம்பறேன்.. இந்த 26 வயது இந்திய வீரர் நிறைய அதிசயம் பண்ண போறார்” – ஷிகர் தவான் பேட்டி

0
194
Shikar

ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே இருக்கின்ற காரணத்தினால், ஐபிஎல் குறித்தான எதிர்பார்ப்பில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உற்சாகமான காத்திருப்பில் இருக்கிறார்கள்.

மிகக்குறிப்பாக ஐபிஎல் தொடரில் தங்களால் இந்திய அணியில் பார்க்க முடியாத பழைய மற்றும் இளம் புதிய இந்தியாவை சேர்ந்த வீரர்களையும் பார்க்க முடியும் என்பது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் தரக்கூடிய மிகப்பெரிய பரவசம் ஆகும்.

- Advertisement -

இந்த வகையில் இந்தியாவிற்கு மூன்று வடிவத்திலும் துவக்க ஆட்டக்காரராக பல நல்ல ரெகார்டுகளை உருவாக்கி இருக்கும் இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வருகின்ற ஐபிஎல் தொடரில் கேப்டன் ஆகவும் துவக்க ஆட்டக்காரராகவும் களம் இறங்க இருக்கிறார்.

ஷிகர் தவானின் பேச்சுகள் எப்பொழுதும் பண்பட்டதாகவும் முதிர்ச்சியாகவும் இருக்கும். இதன் காரணமாகவே அவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். தான் அணியிலிருந்து நீக்கப்பட்ட பொழுது கூட, தன்னுடைய இடத்துக்கு கொண்டுவரப்பட்ட கில்லுக்கு வாழ்த்து கூறும் அளவுக்கு ஷிகர் தவான் பண்பானவர்.

ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் டெல்லி பிறகு நீண்ட காலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அதற்கடுத்து மீண்டும் டெல்லி என சென்றவர் தற்பொழுது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இவரது பயணம் தொடர்கிறது. டெல்லி அணியில் கடைசியாக விளையாடிய பொழுது ரிஷப் பண்ட் உடன் இணைந்து விளையாடி இருந்தார். இதன் காரணமாக இவர்களுக்குள் ஒரு நல்ல நட்பு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ரிஷப் பண்ட் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப இருப்பது குறித்து பேசி உள்ள அவர் “ரிஷப் பண்ட்டை நான் திரும்ப கிரிக்கெட் களத்தில் பார்ப்பதில் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். இவ்வளவு பெரிய விபத்தில் இருந்து அவர் உயிர் தப்பி இருக்கிறார். கடவுளுக்கு பெரிய நன்றி. விபத்திற்கு பிறகு அவர் மிகவும் வேதனைப்பட்டார். அவரால் எங்கும் நகரக்கூட முடியாமல் இருந்தது.

இதையும் படிங்க : “ஐபிஎல்-ல் சேலரி கேப் இல்லனா.. இந்த 4 இந்திய வீரர்களும் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவாங்க” – ராபின் உத்தப்பா பேச்சு

கழிவறைக்கு கூட செல்வதற்கு அவருக்கு இன்னொருவரின் உதவி தேவைப்பட்டது. அவர் கடினமான காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை, நிறைய பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் நேர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். இது மிகப்பெரிய விஷயம். இதனால் இவருக்கு பெரிய நம்பிக்கை கிடைத்திருக்கும். நான் உறுதியாக நம்புகிறேன் அவர் நாட்டிற்கும் தனக்கும் பெரிய அதிசயங்கள் செய்யப் போகிறார்” என்று கூறி இருக்கிறார்.