10 சதவீதம் ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை.. டாசில் நடந்தது என்ன?

0
459

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற இருந்தது.
டாஸ் காலை 6:30 மணிக்கு வீசப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும் நேற்று முதல் மழை பெய்து வருவதால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தது. இதன் காரணமாக டாஸ் தாமதமாக வீசப்பட்டது.இதில் வில்லியம்சன் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து பேசிய ஷிகர் தவான், தாங்களும் டாஸ் ஜெயித்திருந்தால் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம். ஆடுகளம் இன்று அதிக நேரம் தார்பாயால் மூடப்பட்டு இருந்ததால் ஈரப்பதமாக இருந்திருக்கும். இதனால் போட்டியில் சில ஓவர்களுக்கு பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படும். எனினும் நாங்கள் அச்சம் இன்றி அதிரடியாக விளையாட முயற்சி செய்வோம்.

எங்களுடைய ஆட்டத்தில் ஒரு பத்து சதவீதம் முன்னேற்றம் அடைந்தாலே இன்றைய ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவோம் என்று கூறியிருந்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி இரண்டு மாற்றங்களை செய்து இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் கட்டுக்கோப்பாக பந்து வீசிய சர்துல் தாக்கூர் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார்.இதன் காரணமாக அவருடைய இடத்திற்கு தீபக்சாகர் இடம்பெற்றிருக்கிறார்.

இதேபோன்று பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா இடம் பெற்றுள்ளார் .ஆட்டம் தொடங்கியதும் சுப்மான் கில், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4.5 ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது .

- Advertisement -

இன்று நாள் முழுவதும் 90% மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய நிலையில் ரிஷப் பண்டை விட நல்ல பார்மில் சஞ்சு சாம்சன் இருக்கிறார். இருப்பினும் துணை கேப்டன் என்பதற்காக பண்டை வைத்துவிட்டு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டி இருப்பது ரசிகர்களை ஏமாற்றம் செய்து இருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் பிசிசிஐக்கு எதிராக டிரெண்ட் செய்து வருகின்றனர்.