“நான் எனது மனைவியின் பேட்டில் விளையாடியது அவளுக்கு தெரியாது” – மிட்சல் ஸ்டார்க் சுவாரஸ்யமான தகவல்!

0
927
Starc

இன்று உலக கிரிக்கெட்டில் மிக முக்கியமான தொடர்களுக்கான வீரர் என்று பார்க்கப்படக்கூடியவர், ஆஸ்திரேலியா அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்!

ஐசிசி நடத்தும் பெரிய தொடர்கள் என்றால், மேலும் மிக முக்கியமான தொடர்கள் என்றால், இவருக்குள் திடீரென ஒரு அதீத சக்தி ஏற்பட்டு, இவரது செயல்பாடு யாரும் யோசிக்காத வகையில் மிகச் சிறப்பாக இருக்கும். ஆஸ்திரேலியா அணி கோப்பைகளை வெல்வதற்கு இவரது பங்கு தனிப்பட்டதாக அமையும்.

- Advertisement -

ஆஸ்திரேலிய தற்போதைய கிரிக்கெட்டில் இவர் எவ்வளவு முக்கியமான வீரரோ அதேபோல் ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட்டில் இவரது மனைவி அலைசா ஹீலியும் மிகவும் முக்கியமான வீராங்கனை. இவர் விக்கெட் கீப்பர் ஆகவும் பேட்டிங்கில் துவக்க வீரராகவும் வந்து அதிரடியாக விளையாடக் கூடியவர்.

மேலும் இவர் தனது கணவரை விட அதிக முறை ஆஸ்திரேலியா அணிக்காக உலகக் கோப்பைகளை வென்ற அணியில் இடம் பெற்று இருக்க கூடியவர். மொத்தம் ஆறு டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியா அணியிலும், மேலும் இரண்டு முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியிலும் என மொத்தம் எட்டு முறை சாம்பியன் அணியில் இருந்திருக்கிறார். இது உலகத்தில் வேற எந்த வீரர்களை வீராங்கனைகளை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கிரிக்கெட்டில் கணவன் மனைவி இருவருமே ஐசிசி நடத்தும் மிகப்பெரிய தொடர்களில் தமது அணிக்காக மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கக் கூடியவர்களாக நமது காலத்தில் நாம் பார்க்க இருப்பது மிகவும் அரிதான ஒரு விஷயம்.

- Advertisement -

தற்பொழுது இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆசஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இடம் பெறாத ஸ்டார்க், அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளில் வந்து வழக்கம் போல் பெரிய போட்டிகளில் தான் யார் என்பதை காட்டி இருக்கிறார். மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

இவர் சமீபத்தில் பேசும்பொழுது ” இந்த கோடை காலத்தில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு வந்த பொழுது அன்ட்றிச் நோர்க்கியா மிகவும் வேகமாக பந்து வீசக் கூடியவராக இருந்தார். இதனால் எனக்கு விளையாடுவதற்கு எடை குறைந்த பேட் தேவைப்பட்டது. நான் அப்பொழுது என் மனைவியின் பேட்டைதான் பயன்படுத்தினேன். ஆனால் இந்த விஷயம் அவருக்கு தெரியாது.

நான் வீட்டில் சில கிரிக்கெட் பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது அதில் ஒரு பையில் மூன்று பேட்டுகள் இருந்தது. இப்பொழுது அந்தப் பையில் இரண்டு தான் இருக்கிறது இன்னொன்று எனது பையில் இருக்கிறது என்று பின்பு நான் அவளிடம் சொன்னேன்.

இதே போல் சில வருடங்களுக்கு முன்பு அவள் என்னுடைய பேட்டில் ஒன்றை எடுத்து விளையாடி இருக்கிறாள். அப்பொழுது அதன் கைப்பிடி முனையை துண்டித்து விட்டாள். அதனால் எனக்கு அது விளையாட உதவவில்லை!” என்று கூறியிருக்கிறார்!