ஷான் டைட் தேர்வு செய்த சிறந்த ஒரு நாள் அணி – இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கையிலிருந்து ஒருவர் கூட இல்லை

0
2069
Shaun Tait

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்து வீச்சாளரும் தற்பொழுது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமாய் இருக்கக்கூடிய ஷான் டைட் தனது மிகச்சிறந்த ஒரு நாள் அணியை தேர்வு செய்துள்ளார். தனது சொந்த நாடான ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து 4 வீரர்களும் இந்திய நாட்டில் இருந்து 4 வீரர்களும் பாகிஸ்தான் நாட்டில் இருந்து இரண்டு வீரர்களும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து ஒரு வீரர் இடம்பெற்றிருக்கிறார். ஆனால் பலரும் ஆச்சரியப்படும் விதமாக நியூசிலாந்து இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து ஒரு வீரரைக்கூட டெய்ட் தேர்வு செய்யவில்லை.

தனது அணியின் துவக்க வீரராக இரண்டு ஆக்ரோஷமான வீரர்களை தேர்வு செய்துள்ளார். கில்கிறிஸ்ட்டும் சேவாக்கும் தனது அணியின் துவக்க வீரர்கள் என்றும் ஆரம்பத்தில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் இருப்பது அணிக்கு பலம் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

மிடில் ஆடர் வீரர்களை தேர்வு செய்யும்போது மிகப்பெரிய ஜாம்பவான்களை எல்லாம் தனது அணியில் இணைத்து விட்டார். ரிக்கி பாண்டிங் சச்சின் டெண்டுல்கர் பிரையன் லாரா என்று மூன்று பிரம்மாண்ட வீரர்களை தனது அணியின் மிடில் ஆண்டில் இணைத்துள்ளார். மூன்றாம் நிலை வீரர் குறித்து பேசும்போது ரிச்சர்ட்ஸ் விளையாடுவதை அதிகமாக நான் பார்த்ததில்லை என்றும் அதனால் ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

ஆறாவது வீரராக விராத் கோலியை அவர் தேர்வு செய்துள்ளார். இதுதான் சற்று சிக்கலை ஏற்படுத்துகிறது. விராட் போன்ற சிறந்த வீரர்கள் எல்லாம் அணியின் டாப் ஆர்டரில் ஆட வேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் டெயிட் அவரை ஆறாம் நிலை வீரராக தேர்வு செய்துள்ளது ஆச்சரியம்தான். ஏழாவது நிலை வீரர் மற்றும் விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ளார். தோனி இதில் இடம் பிடித்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

பந்து வீச்சில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேர்வு செய்துள்ளார் ஷான் டைட். ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே தான் ஒரே ஸ்பின்னர். 3 வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த கிளன் மெக்ராத் இடம்பிடித்துள்ளார். மற்ற இரண்டு வேகப்பந்து வீச்சாளர் களுக்கான இடத்தை பாகிஸ்தான் வீரர்களான பார்சி மக்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

- Advertisement -

ஷான் டைட் தேர்வு செய்த ஒரு நாள் அணி – கில்கிறிஸ்ட், சேவாக், பாண்டிங், சச்சின், லாரா, கோலி, தோனி, வார்னே, மெக்ராத், வாசிம், அக்தர்.