ஆர்சிபி எல்லீஸ் பெரிக்கு நொறுங்கிய கண்ணாடி விருது.. பின்னணியில் சுவாராசிய காரணம்

0
115
Perry

தற்பொழுது இந்தியாவில் இந்திய கிரிக்கெட் வாரியம் பெண்களுக்காக நடத்தும் டபிள்யூபிஎல் டி20 லீக் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று முடிந்து, நேற்று எலிமினேட்டர் சுற்றுப் போட்டியும் நடந்து முடிந்து, ஞாயிறு அன்று இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டர் சுற்றில் மோதியது. இந்த போட்டியில் எல்லோரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் டாஸ் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அவர்களது முடிவு தவறு என்பது போல அந்த அணியால் 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் 33 வயதான வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் எல்லீஸ் பெரி மிகச் சிறப்பாக விளையாடி 50 பந்துகளில் 66 ரன்கள் குவித்திருந்தார். மேலும் பந்துவீச்சில் நான்கு ஓவர்களுக்கு 29 ரன்கள் மட்டுமே தந்து ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார். இவரது சிறந்த செயல்பாடு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இவருக்கு ஆட்டநாயகி விருது கொடுக்கப்பட்டது. ஆனால் இவருக்கு இந்த முறை தரப்பட்ட இந்த விருது உடைந்த கண்ணாடிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட விருதாக இருந்தது. பெரி பவர்ஃபுல் பஞ்ச் என்று பெயரிடப்பட்ட விருதாக அது இருந்தது. இது பலருக்கும் ஆச்சரியமான ஒன்றாக அமைந்தது. ஆனால் இதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான கதை அமைந்திருக்கிறது.

இந்தத் தொடரில் லீக் சுற்றில் மார்ச் நான்காம் தேதி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்ற 11 வது போட்டியில் ஆர்சிபி அணி உபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பெரி அடித்த அதிரடி அரை சதங்களால் 193 ரன்கள் குவித்தது. மேலும் இந்த போட்டியில் ஆர்சிபி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் 19வது ஓவரின் இறுதிப் பந்தை தீப்தி சர்மா வீச எல்லீஸ் பெரி சிக்ஸருக்கு தூக்கி அடித்தார். அந்தப் பந்து மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த, டபிள்யுபிஎல் டைட்டில் ஸ்பான்சர் ஆன டாடா காரின் கண்ணாடிகளை உடைத்தது. தற்பொழுது அந்த காரின் உடைந்த கண்ணாடிகளைக் கொண்டுதான், எலிமினேட்டர் போட்டியில் எல்லீஸ் பெரிக்கு விருது கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கோலி பாபரை தாண்டி.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து வீரர் படைத்த உலக சாதனை

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 2016 ஆம் ஆண்டு இறுதியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. அதற்குப் பிறகு அவர்களுடைய ஒரு அணி டி20 லீக்கில் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது இந்த ஆண்டுதான் நடைபெற்று இருக்கிறது. இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நாளை விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.