லாரா ஸார் சொன்ன அந்த வார்த்தை.. என்னோட கிரிக்கெட் வாழ்க்கையையே மாத்துச்சு – ஷஷான்க் சிங் பேட்டி

0
24
Shashank

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய நட்சத்திர பேட்டராக ஷஷான்க் சிங் உருவாகி இருக்கிறார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி 200 ரன்கள் துரத்துவதற்கு ஆட்டம் இழக்காமல் அரைசதம் அடித்து வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தார். இவரது பேட்டிங் அணுகுமுறை மாறியதற்கு லாராதான் முக்கிய காரணம் என்று கூறியிருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அடிப்படை விலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வாங்கப்பட்டார். கடந்த ஆண்டு அவர் அந்த அணியால் கழட்டி விடப்பட்டார். மேலும் எந்த அணியும் அவரை ஏலத்தில் வாங்கவில்லை. இப்படியான நிலையில் எந்த ஆண்டு ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் தவறுதலாக அவரை வாங்கியது.

- Advertisement -

மும்பையில் பிறந்து விளையாடி வந்த இவர் தற்பொழுது சத்தீஸ்கர் மாநில அணிக்காக ஐந்து ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கும் விளையாடியிருக்கிறார். இவர் ஹைதராபாத் அணியில் இருந்த போது லாரா கூறிய அறிவுரை எப்படி இவருக்கு உதவியது என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஷஷாங்க் சிங் கூறும் பொழுது ” நான் ஹைதராபாத் அணியில் இருந்த பொழுது ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்தேன். அப்பொழுது அணியின் மென்டராக இருந்த லாரா சார் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்கின்ற காரணத்தினால் என்னை கீழ் வரிசை அதிரடி வீரர் என்று மட்டும் நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறினார். என்னை வழக்கமான பேட்ஸ்மேனாக உணர்ந்து விளையாட சொன்னார். இது என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாக அமைந்தது.

கடந்த ஆண்டு நான் எந்த ஐபிஎல் அணியிலும் இல்லை. ஆனால் நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து முயற்சி செய்தேன். நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநில அணிக்கு கிரிக்கெட் விளையாடுகிறேன். குறிப்பாக சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடுகிறேன். மேலும் நான் கொஞ்சம் பந்தும் வீசக்கூடியவன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹசரங்கா இடத்துக்கு அஸ்வினின் சிஷ்யன்.. தமிழ் பையனை தட்டி தூக்கிய ஹைதராபாத்.. ஐபிஎல் 2024

குஜராத் அணிக்கு எதிராக நான் பேட்டிங் செய்து வெற்றி பெற்றது நல்ல உணர்வாக இருந்தது. அந்தப் போட்டியை குறித்து எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருந்தனர். குறிப்பாக அது வெளியில் விளையாடிய போட்டி. நான் டெல்லி, ஹைதராபாத் ராஜஸ்தான் அணிகளுக்கு முன்பு விளையாடியிருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் லாரா, ஸ்மித் போன்ற பெரிய வீரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது” என்று கூறி இருக்கிறார்.