“சர்துல வெளியில வச்சு.. இந்த பிளேயிங் XI கூட உலக கோப்பையில இறங்குங்க” – ராபின் உத்தப்பா வெளியிட்ட மாஸான இந்திய அணி!

0
2872
Uthappa

கடந்த மாத இறுதிவரை இந்தியாவில் நடக்க இருக்கும் உலக கோப்பையை இந்திய அணி வெல்லுமா? என்று கேட்டால், இந்திய ரசிகர்களில் பலருக்கு நம்பிக்கை என்பது உறுதியாக கிடையாது என்றுதான் கூற வேண்டும்!

ஆசியக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணி மீதும் கூட இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கை கிடையாது. மேலும் அந்த நேரத்தில் அணியில் அறிவிக்கப்பட்ட கேஎல்.ராகுல் காயத்தில் இருந்தது பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது.

- Advertisement -

இதே நேரத்தில் உலகக் கோப்பை இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. அதில் சாகல், அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மூவரில் யார் ஒருவரும் இல்லாதது பெரிய விமர்சனங்களை உருவாக்கியது.

இப்படி இந்திய அணி மீது எந்த நம்பிக்கையும் இல்லாத நேரத்தில் ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 66 ரன்களுக்கு தமது முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இது இந்திய அணி மீது இன்னும் கூடுதல் அவநம்பிக்கையை விதைத்தது.

இதற்கு அடுத்துதான் எல்லா காட்சிகளும் மாற ஆரம்பித்தது. பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ஆச்சரியப்படுத்தியது. இதற்கு அடுத்து குறைந்த ஸ்கோரில் சுருண்டு, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இலங்கையை வீழ்த்தி மேலும் அசத்தியது. ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது.

- Advertisement -

இப்படி ஒரே ஒரு தொடர் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று அடித்து சொல்லும் கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகம் ஆகி இருக்கிறது. தற்பொழுது இந்திய அணி தேவையான எல்லா வீரர்களையும் உள்வாங்கி, உடல் தகுதி மற்றும் சிறப்பான செயல்பாடு என்று வீரர்களை சிறப்பாக வைத்திருக்கிறது.

தற்போது நாளை மற்றும் அக்டோபர் மூன்றாம் தேதி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி, உலக கோப்பையில் தனது முதல் ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அக்டோபர் 8ஆம் தேதி விளையாடுகிறது.

இந்தப் போட்டிக்கு வலிமையான பிளையிங் லெவன் எதுவாக இருக்கும்? என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். சென்னை சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவர் ஸ்ரேயாஸ், சர்துல் மற்றும் சமி ஆகிய வீரர்களை வெளியில் வைத்திருக்கிறார்.

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ராபின் உத்தப்பாவின் உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கேஎல்.ராகுல், இசான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.