நாடு தான் முக்கியம்ன்னு பேட் கம்மின்ஸ் போனா என்ன..? சிஎஸ்கே வளர்த்துவிட்ட சிங்கம் இருக்கு – சஞ்சய் மஞ்ரேக்கர் புகழாரம்!

0
387

பேட் கம்மின்ஸ் போனால் என்ன? அந்த பொறுப்பை சர்துல் தாக்கூர் எடுத்து சிறப்பாக செய்வார் என்று நம்பிக்கையாக பேட்டி அளித்திருக்கிறார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

டி20 உலக கோப்பைத் தொடர் முடிவுற்ற பிறகு ஐபிஎல் ஏலம், தக்கவைக்கப்பட்ட மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் விபரங்கள் பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன.

- Advertisement -

கொல்கத்தா அணி அதிகபட்சமாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அந்த அணியில் இருந்து பெட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற முக்கியமான மூன்று வெளிநாட்டு வீரர்கள் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று வெளியேறிவிட்டனர்.

இதற்காக சர்வதேச போட்டிகள் மற்றும் சொந்த காரணங்களை தெரிவித்து இருக்கின்றனர். அணி நிர்வாகமும் இதற்கு ஒப்புக்கொண்டு தற்காலிகமாக அவர்களை வெளியேற்றிவிட்டது.

- Advertisement -

பேட் கம்மின்ஸ் அந்த அணிக்கு மிக முக்கிய வீரராக இருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் ஆடி வருவதால் ஐபிஎல் போட்டிகளில் தற்போது கவனம் செலுத்த முடியாது என்று விலகி இருக்கிறார்.

கம்மின்சுக்கு நிகரான இந்திய வீரரை தேடி வந்த கொல்கத்தா அணிக்கு சர்துல் தாக்கூர் கவனத்தில் வந்திருக்கிறார். எப்பாடுபட்டாவது அவரை எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக டெல்லி அணி ஏலத்தில் எடுத்த அதே தொகையை கொடுத்து வீரர்கள் பரிமாற்றம் முறைப்படி கொல்கத்தா அணி எடுத்திருக்கிறது.

இதனை குறிப்பிட்டு தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் சஞ்சய் மஞ்ரேக்கர். அவர் கூறுகையில்,

“பேட் கம்மின்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவாரோ, அது போன்ற ஒரு தாக்கத்தை நமது இந்திய வீரர் சர்துல் தாக்கூர் கொல்கத்தா அணிக்காக செய்வார். அவருக்கு இந்தியாவில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு கேகேஆர் அணி அதிகம் விளையாட வைக்கவேண்டும்.

சென்னை அணிக்காக விளையாடும்போது, தோனியிடம் நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறார். டெல்லி அணி அவரை சரியாக பயன்படுத்துவதற்கு முடியாமல் வெளியேற்றி தவறு செய்திருக்கிறது. கொல்கத்தா அணி அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.

- Advertisement -