நான்காவது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றி பெறுவதற்கு முன்பு இரண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பேசிக்கொண்ட ருசிகரமான சம்பவம்

0
310
Shardul Thakur and Sam Curran

இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட திட்டமிட்டிருந்து. ஆனால் 5வது டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த மீதமிருக்கும் 5வது டெஸ்ட் போட்டி கண்டிப்பாக வேறொரு நாளில் நடைபெறும் என இரண்டு கிரிக்கெட் போர்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இவ்வளவு சிறப்பாக செயல்படும் என்று யாருமே நினைக்க வில்லை. பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இந்திய அணி இந்த தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பலரும் வியக்கும் வண்ணமாக வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியின் ஐந்தாம் நாள் ஆரம்பத்தில் டிரா செய்தாலே போதும் என்று நினைத்த இந்திய அணி நாள் போகப்போக ஆட்டத்தை தனது பக்கம் இழுத்து வெற்றி பெற்றது. அடுத்த டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடக்க அந்த போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோல்வியுற்றது. பேட்டிங் வீரர்கள் சிறப்பாக ஆடாததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. தோல்வி முகத்துடன் 4வது டெஸ்ட் போட்டியாக ஓவல் மைதானத்தில் நடந்த போட்டிக்கு இந்திய அணி விளையாட சென்றது.

- Advertisement -

முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகும் இந்திய அணி இந்த போட்டியை சிறப்பாக வென்றது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சதம் அடித்ததினால் இந்திய அணி சிறப்பான முன்னிலை பெற்று நான்காவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

ஐந்தாம் நாளில் இங்கிலாந்து அணி ஒரு வேளை ஆட்டத்தை டிரா செய்து விடுமோ என்று பல இந்தியர்கள் நினைத்த நிலையில் நான்காம் நாள் சென்னை அணியின் வீரரான ஷர்துல் தாகூர் மற்றொரு சென்னை அணியின் வீரரான சாம் குர்ரனிடம் பேசிக்கொண்ட சுவையான சம்பவத்தை தற்போது கூறியுள்ளார். நான்காம் நாள் முடியும் பொழுது இங்கிலாந்து அணி 100 ரன்களை எடுத்து விட்டால் இங்கிலாந்து அணியால் ஆட்டத்தை செய்ய முடியும் என்று சாம் குர்ரன் கூறியதற்கு நீங்கள் 100 ரன்கள் எடுத்தாலும் நான் ஒரு விக்கெட்டை எடுத்துவிட்டால் மீதி 5 விக்கெட்டுகள் விரைவாக விழுந்துவிடும் என்று சர்துல் தாகூர் பதில் கூறியுள்ளார்.

ஷர்துல் தாகூர் கூறியது அப்படியே நடந்ததன் ரகசியம் என்ன என்று இப்போதுவரை புரியாமல் பல ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

- Advertisement -