இந்திய கிரிக்கெட்

சிஎஸ்கேவின் அதிர்ஷ்ட நட்சத்திர இந்திய வீரர்.. லக்னோ அணியில் இணைகிறாரா?.. புகைப்படத்தால் ஏற்பட்ட பரபரப்பு

சிஎஸ்கே அணிக்காக விளையாடி ஐபிஎல் கோப்பையை வென்ற நட்சத்திர இந்திய முன்னாள் வீரர் ஒருவர் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் திடீரென இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்டுக்கு ஐபிஎல் தொடரில் மிக அதிகபட்ச தொகையை கொடுத்து லக்னோ அணி வாங்கி இருந்தது. தற்போது அந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தின் காரணமாக, அந்த அணி மிகப்பெரிய தடுமாற்றத்தில் இருக்கிறது.

காயத்தால் அவதிப்படும் லக்னோ அணி

தற்போது அந்த அணியில் துவக்க வீரர் இடத்திற்கு வாங்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஸ் காயத்தின் காரணமாக விளையாடுவது இன்னும் உறுதியாகவில்லை. மேலும் முழு நேர வேகப்பந்துவீச்சாளரான மோசின் கான் காயத்தில் இருப்பதாகவும் அவர் எப்பொழுது விளையாடுவார் என்றும் தெரியாத நிலை இருக்கிறது.

மேலும் மிக முக்கியமாக அதிவேக வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் நடப்பு ஐபிஎல் தொடரில் பாதி போட்டிகளுக்கு கிடைக்க மாட்டார் என்கின்ற செய்தி உறுதியாகவே வந்திருக்கிறது. இது மட்டும் இல்லாமல் அவர் மீதி தொடரிலும் விளையாடுவாரா என்பது சந்தேகத்திற்கு இடமாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிஎஸ்கேவின் அதிர்ஷ்ட வீரர்

இந்த நிலையில் சிஎஸ்கேவின் அதிர்ஷ்ட வீரராக பார்க்கப்படும், நடந்து முடிந்த மெகா ஏலத்தில் யாராலும் வாங்கப்படாத நட்சத்திர வீரர் சர்துல் தாக்கூர் லக்னோ அணியில் இணைவார் என அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கிறது. தற்பொழுது அந்த அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கட்டாய தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விராட் பாய் ஆர்சிபிக்கு கேப்டனா இருக்க விரும்பல.. நான் உள்ள வந்ததும் இதுதான் தெரிஞ்சது – ஜிதேஷ் சர்மா பேட்டி

மேலும் லக்னோ ஜெர்சியில் பந்து வீசுவது போல சர்துல் தாகூர் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். நிச்சயம் அவர் போன்ற ஒரு வீரர் வலைப்பயிற்சிக்கான பந்துவீச்சாளராக ஒரு அணியில் இணைவது என்பது நடக்காத காரியம். எனவே அவர் அந்த அணியில் இணைய போகிறார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -
Published by

Recent Posts