நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி ஆர்சிபி அணிக்கு கேப்டனாக வர விரும்பவில்லை என்று, தற்போது அந்த அணிக்கு வாங்கப்பட்டு இருக்கும் புதிய வீரரான விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு நீண்ட காலம் கேப்டனாக விராட் கோலி இருந்திருக்கிறார். இந்த நிலையில் அவருடைய தனிப்பட்ட ஆட்டத்தை பார்த்துக் கொள்வதற்காக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். இந்த நிலையில் இந்த மெகா ஏலத்தில் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இருப்பார் என்று பல வகையான செய்திகள் வெளிய வந்தன.
ஆர்சிபி நிர்வாகம் புதிய முடிவு
இப்படியான சூழ்நிலையில் மெகா ஏலத்திற்கு பிறகு ஆர்சிபி அணி நிர்வாகம் இளம் வீரரான ரஜத் பட்டிதாரை புதிய கேப்டனாக அறிவித்தது. விராட் கோலி ரசிகர்கள் மீண்டும் அவர் கேப்டனாக வருவார் என உறுதியுடன் நம்பி இருந்தார்கள். எனவே இந்த அறிவிப்பின் காரணமாக அவர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.
மேலும் ஆர்சிபி அணியின் இயக்குனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் இருவருமே புதிய கேப்டனை தேர்வு செய்வதற்கு விராட் கோலி பெரிய அளவில் ஒத்துழைப்பும் ஆலோசனைகளையும் வழங்கினார் என்று கூறியிருந்தார்கள். இதன் மூலம் தான் கேப்டனாக வருவதற்கு அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இருந்தபோதிலும் விராட் கோலியின் இந்த முடிவை அவரது ரசிகர்களே ஏற்கவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி கேப்டனாக விரும்பவில்லை
இதுகுறித்து ஆர்சிபி அணி வீரர் ஜிதேஷ் சர்மா கூறும் பொழுது “ரஜத் பட்டிதார் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக வருவதை பற்றி எல்லோரும் அறிந்த பொழுது தான் நானும் அறிந்து கொண்டேன். நீங்கள் அணியைச் சுற்றி சில நாட்கள் இருக்கும் பொழுது உங்களால் சில விஷயங்களை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விராட் பாய் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டேன்”
இதையும் படிங்க : 100வது டெஸ்டில் ஓய்வு பெற தோனியை கூப்பிட்டேன்.. ஆனா அடுத்து எதிர்பார்க்காத இது நடந்தது – அஸ்வின் பேச்சு
“அவர் ஏன் கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்பது குறித்து எனக்கு தெரியாது. நான் அணி நிர்வாகத்தில் வேலை செய்யவில்லை. அப்படி நான் அங்கு இருந்து எனக்கு தெரியவரும் பொழுது நான் உங்களுக்கு அதை தெரியப்படுத்துகிறேன். அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அணிக்கு கேப்டனாக இருக்கவில்லை. எனவே இந்த ஆண்டும் கேப்டனாக இருக்க விரும்ப மாட்டார் என்று எனக்குத் தோன்றியது. மற்றபடி ரஜத் நல்ல தேர்வாக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.






