ஏசில உக்காந்துட்டு என்னை பத்தி பேசறதுக்கு முன்ன.. நீங்க என்ன செஞ்சிங்கன்னு பாருங்க – சர்துல் தாக்கூர் பதிலடி

0
292
Shardul

நடப்பு ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பந்துவீச்சாளர்களை விமர்சிப்பதற்கு முன்பாக தங்களது சொந்த புள்ளி விபரங்களை முதலில் பார்த்துக்கொள்ள வேண்டும் என சர்துல் தாக்கூர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் சர்துல் தாக்கூரை 10 அணிகளும் வாங்கவில்லை. லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோசின் காயமடைந்து வெளியேறிய காரணத்தினால் ஜாகீர் கான் வேண்டுகோளுக்காக சர்துல் தாக்கூர் லக்னோ அணியில் இணைந்து சிறப்பாக தற்போது செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

நீங்க முதல்ல இதை புரிஞ்சுக்கணும்

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் 10 அணிகளில் மிகவும் பலவீனமான அணியாக லக்னோ அணி கணிக்கப்பட்டது. மேலும் லக்னோ அணியின் பவுலிங் யூனிட் பலமற்று காணப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் ஐந்து இந்திய பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த அணி தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இரண்டு போட்டிகளில் 10 ரன்கள் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருக்கிறது.

இது குறித்து சர்துல் தாக்கூர் கூறும் பொழுது “ஒரு பவுலிங் யூனிட் ஆக நாங்கள் இந்த சீசன் முழுவதும் சிறப்பாகவே பந்துவீசி இருக்கிறோம் என்று நான் எப்பொழுதும் நம்புவேன். ஆனால் கிரிக்கெட் வர்ணனையில் எங்கள் மீது விமர்சனங்கள் இருக்கிறது. அவர்கள் எப்பொழுதும் பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்குகிறார்கள். பல கிரிக்கெட் தற்பொழுது ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு 200 ரன்கள் என்பது சாதாரணமாகிவிட்டது”

- Advertisement -

உங்கள் புள்ளி விபரங்களை பாருங்கள்

“ஸ்டுடியோவில் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு பந்துவீச்சை விமர்சிப்பது மிகவும் சுலபமானது. ஆனால் மைதானத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் பார்க்க மாட்டார்கள். இவர்கள் யாரையும் விமர்சிப்பதற்கு முன்னால் தங்களுடைய சொந்த பள்ளி விபரங்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க : தோனி அஸ்வின் உங்க மூளை வேலை செய்யறத நிறுத்திடுச்சா.. நீங்க பேசிக்க கூட மாட்டீங்களா? – மனோஜ் திவாரி விமர்சனம்

“நாங்கள் இதே ஐபிஎல் தொடரில் இரண்டு முறை பந்துவீச்சில் வெற்றி பெற்று இருக்கிறோம். இரண்டு போட்டிகளில் 10 ரன்கள் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் பந்துவீச்சை வைத்து வெற்றி பெற்று இருக்கிறோம். எனவே நாங்கள் எங்களுடைய பதட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நாங்கள் முக்கிய விக்கெட்டை கைப்பற்றுவோம் என நம்பி தொடர்ந்து செல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -