இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது.நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று வரை லண்டன் மகாணத்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வந்தது.இந்த ஆட்டத்தில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ஓவல் மைதானத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக இந்திய அணி வெற்றியை ருசித்தது. இதனால் பல நாடுகளைச் சேர்ந்த இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் அனைவரும் விராட் கோலியும் அவரது அணியையும் பாராட்டி வருகின்றனர்.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்ஸ்மேன்கள். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் கடந்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இவர் விளையாட சரியானவர் இல்லை என்று பலர் கூறி வந்த நிலையில் இந்தத் தொடரில் தனது முதல் அயல்நாட்டு சதத்தை அடித்து தனது முத்திரையை பதிவு செய்துள்ளார் ரோகித். மேலும் கடந்த டெஸ்ட் முடிவின் போது தான் இந்திய கேப்டன் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் கடந்தார் ரோகித்திற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது இந்த விருதுக்கு என்னை விட இன்னொரு முக்கியமான வேறு தகுதி உடையவராக இருக்கிறார் என்று ரோகித் கூறியுள்ளார். அவரும் ரோஹித்தை போலவே மும்பை நகரில் இருந்து வந்தவர் தான். முதல் இன்னிங்சில் இந்திய அணி தத்தளித்துக் கொண்டிருந்த போது சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த வீரர் ஷர்துல் தாகூர். 2வது இன்னிங்சிலும் அரை சதம் எடுத்ததோடு இல்லாமல் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய ஏ அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றவர் தாகூர். அந்த மூன்று முக்கிய விக்கெட்டுகள் இல் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டும் அடங்கும்.
இதனால் ஷர்துல் தாகூர் தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் என்றும், அவர் அடித்த இரண்டு அரை சதங்களும் எடுத்த விக்கெட்டுகள் என அத்தனையுமே ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியது என்றும் ரோகித் கூறியுள்ளார். அவரை அருகிலிருந்து நான் பார்த்து உள்ள காரணத்தினால் அவர் எந்த அளவிற்கு தனது பேட்டியை எடுத்து விடுகிறார் என்பதை நான் அறிவேன் என்றும் ரோகித் கூறியுள்ளார்.