இந்த முறை கொல்கத்தாவுக்கு ஷர்துல், ரிங்கு சிங் யாருடைய மேஜிக்கும் பலிக்கவில்லை; ஜஸ்ட் தப்பியது ஹைதராபாத்!

0
141
Ipl2023

இன்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன!

இந்தப் போட்டியில் முதலில் டாசை தோற்று விளையாடிய ஹைதராபாத் அணிக்கு கேப்டன் மார்க்ரம் 26 பந்துகளில் அரை சதம் அடித்தார். 24 வயதான இங்கிலாந்து வலது கை பேட்ஸ்மேன் ஹாரி புரூக் 55 பந்துகளில் அதிரடி சதம் அடித்து இந்த தொடரில் முதல் சதத்தை பதிவு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரூ ரசல் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முதல் ஓவரிலேயே ரகமன்னுல்லாவை ஆட்டம் இழக்க செய்து புவனேஸ்வர் குமார் அதிர்ச்சி தந்தார். வெங்கடேஷ் 10 ரன்கள், ஜெகதீசன் 36 ரன்கள் சுனில் நரைன் பூஜ்யம், ரசல் 3 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுடன் கொல்கத்தா அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் கைகோர்த்தார். இந்த ஜோடி அதிரடியாக ஹைதராபாத் பந்துவீச்சை நொறுக்கி ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இதில் அதிரடியாக விளையாடிய கேப்டன் நிதிஷ் ரானா 41 பந்தில் 5 பவுண்டரி ஆறு சிக்ஸர் உடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் இருக்கும் வரையில் கொல்கத்தா அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.

இதற்கு அடுத்து ஒரு முனையில் ரிங்கு சிங் வழக்கமான அதிரடியில் மிரட்டி ஹைதராபாத் அணியையும் ரசிகர்களையும் பயத்திலேயே வைத்திருந்தார். கடைசி நேரத்தில் நடராஜன் மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த, கடைசி ஓவருக்கு 32 ரன்கள் தேவை என்கின்ற நிலை உருவாகிவிட்டது. உம்ரான் மாலிக் பேசிய இந்த ஓவரில் கொல்கத்தா அணியால் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரிங்கு சிங் ஆட்டம் இழக்காமல் தலா நான்கு பவுண்டரி மற்றும் சித்தர்கள் உடன் 58 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 205 ரன்களை 7 விக்கெட் இழப்புக்கு எடுத்தது. ஹைதராபாத் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் தரப்பில் மயங்க் மார்க்கண்டே நான்கு ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நான்காவது ஆட்டத்தில் விளையாடிய ஹைதராபாத் அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். நான்காவது ஆட்டத்தில் விளையாடிய கொல்கத்தா அணிக்கு இது இரண்டாவது தோல்வி ஆகும்.