ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியிருக்கிறார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. கடந்த முறையை விட இந்த முறை எல்லா வீரர்களும் காயம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்திய அணி முழுமையான அணியாக பயணம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு இருக்கும் ஒரே கவலை
இந்த நிலையில் தற்போது இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் குணமடைந்து இந்திய அணிக்கு மீண்டும் விளையாட கிடைப்பாரா என்பது கேள்வியாக இருந்து வருகிறது. தற்போது இந்திய அணிக்கு இருக்கும் ஒரே கவலையாக இந்த விஷயம் மட்டுமே இருக்கிறது.
அதே சமயத்தில் அவர் கிடைக்காவிட்டாலும் கூட அவருடைய இடத்திற்கு ஆகாஷ் தீப் இருக்கிறார். ஆனால் வெளியில் மாற்று வேகப்பந்துவீச்சாளராக இன்னும் நம்பிக்கையான ஒரு வீரரை இந்திய அணி நிர்வாகம் கண்டுபிடிக்கவில்லை. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால் மாற்று வேகப் பந்துவீச்சாளர்கள் கட்டாயம் தேவை.
இந்த ரெண்டு பேர் சிறப்பா செய்வாங்க
இந்தத் தொடர் குறித்து ஷேன் வாட்சன் கூறும்பொழுது “ரிஷப் பண்ட் தன்னுடைய கடைசி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்து நிறைய நல்ல நினைவுகளை பெற்றிருக்கிறார். அவர் காபாவில் விளையாடியது வரலாற்று சிறப்பு வாய்ந்த இன்னிங்ஸ் ஆகும். கடந்த இரண்டு வருடங்களாக அவர் மிகவும் பெரிய சவால்களை எதிர்கொண்டு மீண்டு வருகிறார். அவரால் மீண்டும் சிறப்பாக செயல்பட முடியும் என்று சிறப்பை உணர்ந்தால் அவர் ஆஸ்திரேலியாவில் சாதிக்கப் போகிறார்”
இதையும் படிங்க : சூரியகுமார் உங்க பேட்ஸ்மேன்கள் கிட்ட இத சொல்லுங்க.. எதுக்கு பயப்படனும்? – ஆகாஷ் சோப்ரா வேண்டுகோள்
“மேலும் பும்ரா ஆஸ்திரேலியா சூழ்நிலைகளில் மட்டுமில்லாமல் எல்லா சூழ்நிலைகளிலும் அவர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். விக்கெட்டை மட்டுமே குறிவைத்து கைப்பற்ற கூடியவர். எனவே இவரும் திறமையாக செயல்படுவார். இவர்கள் திறமையாக செயல்பட்டு தொடரில் சிறப்பாக இருந்தார்கள் என்றால், ஆஸ்திரேலியாவிற்கு பெரிய சவால்களை உருவாக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.






