இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார்.
மத்திய பிரதேஷ் குவாலியர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடைந்த பங்களாதேஷ் அணியின் நம்பிக்கை
பங்களாதேஷ் அணி இந்தியா வருவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆச்சரியப்படுத்தி இருந்தார்கள். இதனால் மிகுந்த நம்பிக்கையில் இருந்த அவர்கள் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஏதாவது செய்ய முடியும் என்று நம்பினார்கள். ஆனால் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி அவர்கள் நம்பிக்கையை உடைத்தது.
இதைத்தொடர்ந்து டி20 கிரிக்கெட் என்பதால் அடுத்த தொடரில் ஏதாவது செய்ய முடியும் என்கின்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால் முதல் டி20 போட்டியில் இந்திய வீரர்கள் செயல்பட்ட விதம் பங்களாதேஷ் வீரர்களுக்கு பெரிய அவநம்பிக்கையை உருவாக்கி விட்டது. தற்பொழுது அந்த அணி பலவீனமான நிலையில் இருக்கிறது.
சூரியகுமார் இதை போய் சொல்லுங்க
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” உங்களால் ஒரு அணிக்கு எதிராக 70% திறமையாக விளையாடினாலே வெற்றி பெற முடியும் என்கின்ற நிலை இருக்கும் பொழுது, நீங்கள் சவால் விட வேண்டும் உங்களுக்கு உள் உத்வேகம் இருக்க வேண்டும். டாஸ் வென்றால் எதிரணி உங்களை பேட்டிங்தான் செய்ய சொல்லும். நீங்கள் டாஸ் வென்றாலும் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். எனவே இப்பொழுதே உங்கள் பேட்ஸ்மேன்களிடம் நீங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள்”
இதையும் படிங்க : இந்திய தொடர்.. வலிமையான நியூசிலாந்து அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் முதல் டெஸ்டில் விலகல்
“இப்பொழுது இந்திய பேட்ஸ்மேன் விளையாடுவது போலவே விளையாடினால் 225 முதல் 240 ரன்கள் வரும். நீங்கள் தாராளமாக இப்படி விளையாடலாம். இரண்டாவதாக பந்து வீசும் பொழுது பனி வரும் மற்றும் வந்து ஈரமாகும் என்று சொல்வார்கள் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் அப்படி தோற்றால் கூட மக்கள் எதிர்பார்க்கும் கிரிக்கெட்டை விளையாடியதால் உங்களை பாராட்டவே செய்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.






