அடுத்த 2 வருடங்களுக்கு இந்திய டெஸ்ட் கேப்டன் & துணை கேப்டனாக இந்த 2 வீரர்கள் செயல்படுவதே நல்லது – ஷேன் வார்னே கருத்து

0
451
Shane Warne

விராட் கோலி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து வெளியேறியது அனைவருக்கும் தெரிந்த கதை. அது ஒருபுறமிருக்க மறுபுறம் இந்திய அணி இனி மீதமிருக்கும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ( 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் சுற்று போட்டிகள் ) வென்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும்.

எனவே ஒரு சிறந்த வீரர்களுக்கு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை கொடுப்பது மட்டுமே தற்போது உள்ள சூழ்நிலையில் சரியான செயலாக இருக்கும். விராட் கோலிக்கு அடுத்தபடியாக எந்த வீரருக்கு அந்தப் பதவியை கொடுப்பது என மிகப்பெரிய கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.

- Advertisement -

கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் 0-3 என்கிற கணக்கில் தோல்வி அடைந்ததால் அவருக்கு டெஸ்ட் கேப்டன் பதவியை கொடுப்பதில் இந்திய ரசிகர்களுக்கு முரண்பாடு உள்ளது.

பெரும்பாலான இந்திய ரசிகர்கள் டெஸ்ட் கேப்டன் பதவியை ரோஹித் ஷர்மாவிடம் கொடுப்பது தான் சரியான முடிவாக இருக்கும் என்று சொல்லி வந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைசிறந்த ஸ்பின் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே இந்திய ரசிகர்கள் கூறிய அதே கருத்தையே தற்பொழுது முன்வைத்துள்ளார்.

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் ரோஹித் ஷர்மா

2013ம் ஆண்டு முதல் தற்போது வரை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை மிக சிறப்பாக வழிநடத்தி ஐந்து முறை கோப்பையை கைப்பற்றிய சிறந்த கேப்டன் என்றால் அது ரோஹித் ஷர்மாவே. அதுமட்டுமின்றி சிலசமயங்களில் இந்திய அணியையும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிக சிறப்பாக வழிநடத்தி, ஆசிய கோப்பை மற்றும் நிதஹாஸ் டிராபி போன்ற தொடரையும் வென்றிருக்கிறார்.

- Advertisement -

ஒரு சிறந்த கேப்டனாக அவர் இந்திய அணியை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் பிசிசிஐ புதிய ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோஹித் ஷர்மாவை அந்தப் பணியில் கடந்த ஆண்டு கூட நியமித்தது. அதேபோல டெஸ்ட் போட்டிகளிலும் பிசிசிஐ மீண்டும் ரோஹித் ஷர்மாவை பணி அமர்த்தினால் சரியான முடிவாக இருக்கும் என்று முன்னாள் வீரர் ஷேன் வார்னே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா மிக சிறப்பாகவே விளையாடி வருகிறார். எனவே டெஸ்ட் போட்டிகளிலும் அவர் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகும், துணை கேப்டன் பதவியை அதேபோல ஜஸ்பிரித் பும்ராவிடம் கொடுப்பது கூடுதல் சிறப்பாக அமையும் என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.