கோஹ்லி பயிற்சி செய்யும் வீடியோவிற்கு பாகிஸ்தான் வீரர் அப்ரிடி கொடுத்த ரிப்ளை

0
80
Shahid Afridi and Virat Kohli

நாளையுடன் ஐபிஎல் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவு பெறுகின்றன. வருகிற 10ஆம் தேதி முதல் பிளே ஆஃப் சுற்று தொடங்கி, பின்னர் 15ம் தேதி இறுதி போட்டி நடக்கவுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகள் இருக்கின்றன. முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் இந்த இரண்டு அணிகளும் வருகிற ஞாயிறு அன்று மோத உள்ளது.

புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் பெங்களூரு அணி உள்ள நிலையில், நான்காவது இடத்திற்கு மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் இன்னும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் இருக்கின்ற பெங்களூரு அணி, தனது பிளே ஆஃப் சுற்றை உறுதிப்படுத்திய காரணத்தினால் பெங்களூரு அணி ரசிகர்கள் அனைவரும் தற்பொழுது உற்சாகத்துடன் உள்ளனர்.

- Advertisement -

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் வலைதளத்தில், நெட்களில் பயிற்சி எடுப்பது போல ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவுக்கு பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ஷாகித் அஃப்ரிடி தற்போது கமெண்ட்டு செய்துள்ளார்.

அவரது பேட்டிங்கை பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது

விராட் கோலி மிக தீவிரமாக பயிற்சி எடுக்கும் அந்த வீடியோவை கண்ட ஷாகித் அஃப்ரிடி, விராட் கோலியின் பேட்டிங் பார்ப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று கூறினார். மேலும் ப்ரொபஷனல் பேட்ஸ்மேன்கள் எப்பொழுதும் வலையப்பயிற்சி தளத்தில் கூட, மிகத் தீவிரமாக விளையாடுவார்கள்.

பயிற்சி ஆட்டம் தானே என்று கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தங்களது 100 சதவீத உழைப்பை முழுவதுமாக வெளிப்படுத்துவார்கள். இவ்வாறு விராட் கோலியை ஷாகித் அஃப்ரிடி தன்னுடைய கமெண்ட் மூலமாக ட்விட்டர் வலைதளத்தில் பாராட்டு தள்ளினார்.

- Advertisement -

என்னுடைய கிரிக்கெட் கேரியர் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது

ஷாகித் அஃப்ரிடி பல்வேறு முறை ஓய்வு அறிக்கையை வெளியிட்டு, அதன் பின்னர் மீண்டும் சர்வதேச அளவில் பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் விளையாடிய கதை நம் அனைவருக்கும் தெரியும். கடைசியாக ஓய்வு அறிக்கையை வெளியிட்டு, மீண்டும் அவர் பாகிஸ்தான் அணியில் பங்கெடுத்தார். இருப்பினும் அவர் சர்வதேச அளவில் பாகிஸ்தான் அணிக்காக சமீப நாட்களில் விளையாடியதில்லை.

அவர் சமீப நாட்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சில போட்டிகளில் மட்டும் பங்கெடுத்து விளையாடினார். அதுமட்டுமின்றி சமீபத்தில் நேபால் எவரஸ்ட் பிரீமியர் லீக் தொடரிலும் அவர் பங்கெடுத்து கொண்டார். அவ்வப்போது சில சில போட்டிகளில் விளையாடி வரும் அவர் தன்னுடைய கிரிக்கெட் கேரியர் முடிவை நெருங்கிவிட்டது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.

முன்பு போல என்னுடைய உடல் கிரிக்கெட் விளையாட ஒத்துழைக்கவில்லை. அதுமட்டுமின்றி என்னுடைய அறக்கட்டளை நிறுவனம் சம்பந்தமான வேலைகளில் நான் சற்று பிஸியாக இருக்கிறேன். என்னுடைய கிரிக்கெட் கேரியர் நிறைவு பகுதியை எட்டு விட்டதாக உணர்கிறேன். கூடிய விரைவில் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலுமாக ஓய்வு எடுத்துக் கொள்ள போகிறேன்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இரண்டாவது இன்னிங்ஸ் மிகப் பெரிய பொறுப்பை உடையது. என்னுடைய வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்சில் காலடி எடுத்து வைக்க நேரம் வந்துவிட்டது. எனவே கூடிய விரைவில் நான் சொன்ன அனைத்து விஷயங்களும் ஒவ்வொன்றாக அரங்கேறப் போகிறது என்று ஷாகித் அஃப்ரிடி நெகிழ்ச்சியுடன் கூறி முடித்தார்.