ஷாஹீன் அப்ரிடி உலக சாதனை..மேத்யூஸ் 64 ரன்கள்.. முதல் நாளே சூடு பிடிக்கும் பாகிஸ்தான் இலங்கை டெஸ்ட் போட்டி!

0
26133

பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . இந்த இரண்டு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது .

இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக நிஷான் மதுசங்கா மற்றும் கேப்டன் கருணாரத்னே ஆகியோர் காலம் இறங்கினர். துவக்கத்திலேயே பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிதி இலங்கை அணியை மிரட்டினார் .

- Advertisement -

அவர் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது . ஐந்தாவது விக்கெட் இருக்கு ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தனஞ்செயா டிசில்வா அணியை சரிவில் இருந்து மீட்டனர் .

இவர்கள் இருவரும் ஐந்தாவது விக்கெட் ஜோடியாக 131 ரன்கள் சேர்க்க இலங்கை அணி 185 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த போது சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 64 ரன்களில் ஆட்டம் இழந்தார் .

இலங்கை அணி 222 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது . இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி முதல் நாள் முடிவில் 242 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இருந்தது . சிறப்பாக விளையாடிய தனஞ்செயா டிசில்வா 94 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும் .

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷாகின் அப்ரிதி 63 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் நசீம் ஷா , அப்ரார் அகமத் மற்றும் அகா சல்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர் . இந்த டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஷாஹீின் அப்ரிதி டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை நிறைவு செய்தார். மேலும் 23 வயதிலேயே 100 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் அப்ரிதி . இந்த சாதனையின் மூலம் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனுஸ் ஆகியோருடன் 23 வயதில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த இரண்டு முறை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . அதனால் 2023=2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கும் அவர்களுக்கு இந்த டெஸ்ட் தொடரானது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.