“ஷாகின் அப்ரிடி இந்த இடத்தில் ஒரு சாதாரண பவுலர்.. நிறைய கத்துக்கனும்!” – சல்மான் பட் தெளிவான விளக்கம்!

0
1633
Shaheen

தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு ஏற்படும் பிரச்சனைகள் மிகவும் விசித்திரமான ஒன்றாக இருக்கிறது. அந்த அணிக்கு எது ஒன்றுமே தொடர்ச்சியாக சரியாக அமைவதில்லை.

பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலமாக வேகப்பந்து வீச்சு பார்க்கப்பட்டது. அந்த அணியின் துவக்க வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக பார்க்கப்பட்டார்.

- Advertisement -

இதுவெல்லாம் ஆசியக் கோப்பையில் அவர் இந்திய அணியை சந்திப்பதற்கு முன்பு வரையில் இருந்தது. புதிய பந்தில் விக்கெட்டையும் தராமல் அவரிடம் இருந்து ரன்னையும் எப்படி அடிப்பது என்று இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் ரோஹித் சர்மா காட்டினார்கள்.

இதற்குப் பிறகு அவருடைய அச்சுறுத்தும் பந்துவீச்சை வேறு எந்த அணிகளுக்கு எதிராகவும் பார்க்க முடியவில்லை. அவரிடம் இருந்து எளிதாக ரன்கள் வந்து கொண்டிருக்கிறது. அவரை மிகச் சுலபமாக பேட்ஸ்மேன்கள் எதிர் கொண்டு விடுகிறார்கள்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கூட அவரது பந்துவீச்சு தாக்கம் தருவதாக இல்லை. இதன் காரணமாக அவருக்கு பெரிய அறிவுரைகள் வெளியில் இருந்து வந்து கொண்டே இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறும்பொழுது ” அவர் புதிய பந்தில் உலகில் ஒரு நான்கு பந்துவீச்சாளர்களில் முக்கியமானவர். ஆனால் அவரது இரண்டாவது மற்றும் மூன்றாவது ஸ்பெல்களை பார்க்கும் பொழுது, அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

பந்து பழையதாக மாறிவிட்டால் அவர் சாதாரண பந்துவீச்சாளராக மாறிவிடுகிறார். அவருக்கு ஆற்றல் இருக்கிறது மேலும் மனதளவில் அவர் உறுதியானவர். எனவே அவர் ஒரு முழுமையான பந்துவீச்சாளராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு!” என்று கூறி இருக்கிறார்!

இதற்கு அடுத்து பாகிஸ்தான அணிக்கு மிக முக்கிய போட்டியாக ஆஸ்திரேலிய அணி உடன் சிறிய மைதானமான பெங்களூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் வெல்ல வேண்டியது இரு அணிகளுக்குமே முக்கியமானது.