இந்த ஆண்டு இந்திய உள்நாட்டு டி20 தொடர் சையத் முஸ்டாக் அலி தொடரை இஷான் கிஷான் தலைமையிலான ஜார்க்கண்ட் அணி கைப்பற்றியது. இந்த வெற்றிக்குப் பின்னால் மகேந்திர சிங் தோனி இருக்கிறார் என மாநில கிரிக்கெட் போர்டில் செயலாற்றி வரும் இந்திய முன்னாள் வீரர் ஷாபாஸ் நதீம் தெரிவித்திருக்கிறார்.
இவர் தற்போது ஜார்க்கண்ட் கிரிக்கெட்டில் துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். மகேந்திர சிங் தோனி தனது சொந்த மாநில ஜார்கண்ட் அணிக்கு எந்த வகையில் எல்லாம் தொடர்ந்து உதவியாக இருந்து வருகிறார் என்பது குறித்து கூறியிருக்கிறார்.
மிகக் குறுகிய கால அளவில் உருவான ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் இன்று சையத் முஸ்டாக் அலி தொடரை வெல்லும் அளவுக்கு சிறப்பாக வளர்ந்திருக்கிறது. இதற்கு முன்பு ஒரு முறை விஜய் ஹசாரே டிராபி தொடரையும் ஜார்கண்ட் அணி வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாநில கிரிக்கெட்டில் சிறிய அணியான ஜார்கண்ட் சமீப காலகட்டத்தில் மிகச் சிறப்பான முறையில் விளையாடும் வருவதற்கு பின்னணியில் மகேந்திர சிங் தோனியின் பங்கும் இருக்கிறது என்று வெளிப்படையாகவே ஷாபாஷ் நதீம் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு தொடருக்கு முன்னாலும் மகேந்திர சிங் தோனி எப்படி பின்னால் இருந்து பணியாற்றுகிறார்? என்றும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஷாபாஷ் நதீம் கூறும் பொழுது ” இந்த வருட கிரிக்கெட் சீசனை நாங்கள் துவங்கிய பொழுது மகேந்திர சிங் தோனி பயிற்சியாளர் முதல் யார் இருக்க வேண்டும் என கொடுத்த பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அவர் முழு சையத் முஸ்டாக் அலி தொடரிலும் ஜார்க்கண்ட் விளையாடி வருவதை பார்த்து வந்தார். மேலும் வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து எங்களுடன் தொடர்ந்து உரையாடினார்”
இதையும் படிங்க : ஒரே நாளில் 20 விக்கெட்டுகள்.. முதல் நாளில் 2வது இன்னிங்ஸ் சென்ற சோகம்.. ஆஸி இங்கி பரிதாபங்கள்.. ரசிகர்கள் கோபம்
“ஜார்க்கண்டில் இருந்து வரும் ஒவ்வொரு இளம் வீரர்களின் புள்ளி விவரங்களும் தோனிக்கு அப்படியே தெரியும். அந்த அளவிற்கு அவர் ஜார்க்கண்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து வருகிறார். மேலும் ஜார்க்கண்ட் கிரிக்கெட் வளர்ச்சியில் பங்காற்ற அவர் மிகவும் விரும்புகிறார்” என்று கூறி இருக்கிறார்.