ஷஃபீக் சாதனை இரட்டை சதம்.. சல்மான் 132*.. பரபரப்பான கட்டத்தில் இலங்கை பாகிஸ்தான் 2வது டெஸ்ட்!

0
759
Shafique

பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணி புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டத்திற்கான முதல் சுற்றுப்பயணத்தை இலங்கைக்கு செய்திருக்கிறது. இலங்கைக்கும் இதுவே புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தின் முதல் தொடராகும்!

பாகிஸ்தானின் இந்தச் சுற்றுப் பயணத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தத் தொடரில் முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் வென்று பாகிஸ்தான அணி முன்னிலை வகிக்கிறது!

- Advertisement -

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிஇரு அணிகளுக்கு இடையே துவங்கியது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வது என்று தீர்மானித்தது.

இலங்கையின் இந்த முடிவிற்கு இலங்கையின் பேட்ஸ்மேன்கள் கேப்டன் வரை யாரும் ஒத்துழைப்பு தரவில்லை. தனஞ்செய டி சில்வா மட்டுமே தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார். முடிவில் இலங்கை அணி 48.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 166 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது நான்கு விக்கெட்டுகள், நசீம் ஷா மூன்று விக்கெட்டுகள்கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் மட்டுமே 6 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதற்கடுத்து வந்த ஷான் மசூத் 51, பாபர் ஆஸம் 39, சவுத் ஷகீல் 57 இன்று சிறப்பான ஒத்துழைப்பை ஒரு முனையில் தந்தார்கள். நடுவில் மூத்த அனுபவ விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் அகமது தலையில் அடிபட்டு 17 ரன்களில் வெளியேறினார். இறுதிக்கட்டத்தில் இவருக்கு பதிலாக உள்ளே வந்த முகமது ரிஸ்வான் 37 ரன்கள் உடன் களத்தில் தற்பொழுது நிற்கிறார்.

- Advertisement -

இதற்கு நடுவில் துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷஃபீக் மிகச் சிறப்பாக விளையாடி சதம் தாண்டி தொடர்ந்து நின்றார். இவருடன் சேர்ந்து ஆஹா சல்மான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் அப்துல்லா ஷஃபீக் 19 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் தனது இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். இறுதியாக அவர் 201 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து களத்தில் நின்ற ஆஹா சல்மான் அரை சதம் தாண்டி சிறப்பாக விளையாட, அடுத்து வந்த முகமது ரிஸ்வான் சிறப்பான ஒத்துழைப்பு தந்தார். மேற்கொண்டு சிறப்பாக விளையாடிய சல்மான் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அடித்து, இன்றைய ஆட்ட நாள் முடிவில் 132 ரன்கள் உடன் களத்தில் நிற்கிறார்.

பாகிஸ்தான அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 563 ரன்களை முதல் இன்னிங்ஸில் சேர்த்து, இலங்கையை விட தற்பொழுது 397 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. இன்னும் ஆட்டத்தில் இரண்டு நாட்கள் எஞ்சி இருக்கிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தை மழை முழுதாக நிறுத்தியது போல எதுவும் நடக்காவிட்டால், இந்த டெஸ்டில் பாகிஸ்தானின் வெற்றி உறுதி.

இன்று இரட்டை சதம் அடித்த அப்துல்லா ஷபீக் மிகக் குறைந்த வயதில் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்டில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 19 வயது 140 நாட்களில் ஜாவித் மியான்தத் பாகிஸ்தான் அணிக்காக இரட்டை சதம் அடித்தது இந்த வகையில் சாதனையாக இருக்கிறது. 23 வயது 27 நாட்களில் ஹனிபா முகமது இரட்டை சதம் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!