தோனி கேப்டனா இல்லனா.. எனக்கு அது நடக்க வாய்ப்பு இல்லை.. உலகின் சிறந்த கேப்டன் அவர் – சிஎஸ்கே முன்னாள் வீரர்

0
55

18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சதாப் ஜகாதி எம் எஸ் தோனியின் கீழ் விளையாடிய அனுபவங்கள் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே முன்னாள் வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை வந்து ராஜஸ்தான் அணி இடம் தோல்வியை தழுவியது. அதற்குப் பிறகு 2009 ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றில் வெளியேறினாலும் அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகச் சிறப்பாக விளையாடி ஐபிஎல் கோப்பையை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தது. அந்த அணியில் இடம் பெற்று இருந்த சுழற் பந்துவீச்சாளர் சதாப் ஜகாதி சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார்.

2009ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஒன்பது போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளும் அதற்கு அடுத்த ஆண்டு 11 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த சூழ்நிலையில் தற்போது அளித்த ஒரு பேட்டியில் மகேந்திர சிங் தோனி தான் தனக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கியதாகவும், அவர் இல்லையென்றால் தான் இத்தனை ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாடியிருக்க முடியாது என்றும் சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

தோனி இல்லை என்றால் வாய்ப்பு இல்லை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அது ஒரு கனவு நினைவான தருணம் போல் இருந்தது. மகேந்திர சிங் தோனியின் கீழ் இத்தனை ஆண்டுகள் விளையாடியது எனக்கு மிகப்பெரிய விஷயம். சிஎஸ்கேவில் மஹி பாய் கேப்டன்சி காரணமாகத்தான் நான் இத்தனை ஆண்டுகள் விளையாடினேன். அவர் கேப்டனாக இல்லாவிட்டால் நான் இத்தனை வருடங்கள் சென்னை அணியில் விளையாடி இருக்க வாய்ப்பே இல்லை.

இதையும் படிங்க:பேட் விளிம்புல பட்டாலே சிக்ஸ் பறக்கும்.. அவங்க 2 பேர்க்கு பந்து வீசுவது எனக்கு ரொம்பவே கஷ்டம் – சஹால் பேட்டி

அவர் பந்துவீச்சாளர்களை ஆதரிக்கும் விதத்தை பார்த்தால் அவர் உலகின் சிறந்த கேப்டன் என்று நான் நினைக்கிறேன். எனக்கு மிகவும் மறக்க முடியாத விக்கெட்டாக அமைந்தது 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தியதாகும். அதுதான் போட்டியின் மிக முக்கிய தருணமாக அமைந்தது. அதன் பின் நாங்கள் கோப்பையை வென்றோம். அது எனக்கு ஒரு மிகப்பெரிய சாதனையாக இருந்தது” என்று ஜகாதி பேசியிருக்கிறார். அதற்குப் பிறகு சென்னை அணி தோனியின் தலைமையில் மூன்று ஐபிஎல் கோப்பைகளை வெற்றி பெற்று சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -