இந்திய அணிக்கு பின்னடைவு.. கே எல் ராகுலை தொடர்ந்து ஆசிய கோப்பையில் இருந்து விலகும் மற்றொரு நட்சத்திர வீரர்!

0
5227

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தோல்விக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது .

இந்த சுற்றுப் பயணத்தை முடித்த பின் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து சென்று அந்த நாட்டு அணியுடன் மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரானது ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்கி 23ஆம் தேதி முடிவடைய உள்ளது .

- Advertisement -

அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 31ஆம் தேதி 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து நடைபெற இருக்கின்றன . 13 போட்டிகளைக் கொண்ட ஆசிய கோப்பையில் ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் வைத்து நடைபெற இருக்கிறது .

இந்த வருட ஜனவரி மாதத்திலேயே அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான அணியை தேர்வு செய்வதற்காக 20 வீரர்களை கொண்ட பட்டியலை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற வீரர்களில் இருந்து 15 வீரர்கள் உலகக்கோப்பை காண அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவித்திருந்தது .

எதிர்பாராத விதமாக இந்த அணியில் இடம் பெற்றிருந்த இந்தியாவின் மூன்று நட்சத்திர வீரர்கள் காயங்களில் இருந்து இன்னும் முழுவதுமாக குணமாகவில்லை . இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த வருடம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் காயம் அடைந்தார் . அதனைத் தொடர்ந்து ஆசியக் கோப்பை டி20 தொடர் மற்றும் உலகக்கோப்பை டி20 போட்டிகளிலும் பங்கேற்கவில்லை .

- Advertisement -

இந்த வருடம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்தார் . ஆனால் இறுதி நேரத்தில் முழு உடற்தகுதி பெறவில்லை என்று அணியில் இருந்து நீக்கப்பட்டார் . இதனைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இது இந்திய அணிக்கு நம்பிக்கையை தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் இரண்டு முன்னணி வீரர்களின் காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக இருக்கிறது

இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி பிரச்சனை காரணமாக ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இருந்து விலகினார் . அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற் தகுதியை நிரூபிக்க பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார் .

ஸ்ரேயாஸ் ஐயர் ஆசியக் கோப்பைகளுக்கான போட்டியில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆசிய கோப்பை போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .அவருக்கு இன்னும் முதுகில் வலி இருப்பதாகவும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளின் போதும் ஊசிகளை செலுத்திக் கொண்டுதான் பயிற்சியில் ஈடுபடுகிறார் என்றும் பிசிசிஐக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன .

மேலும் சமீப காலமாக இந்திய அணிக்கு ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த கே எல் ராகுல் ஐபிஎல் தொடரின் போது காயம் ஏற்பட்டு அந்தத் தொடரில் இருந்து விலகினார் . இதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது . அறுவை சிகிச்சையை தொடர்ந்து என்சிஏ வில் பயிற்சிகள் இறங்கினார் கேஎல்.ராகுல் . அவரும் ஆசிய கோப்பை போட்டிகளின் போது முழு உடற் தகுதியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் தற்போது அவர் கிரிக்கெட்டிற்கு திரும்புவதற்கு இன்னும் சற்று கால அவகாசம் தேவைப்படும் என்று என்சிஏ வின் மருத்துவக் குழு தெரிவித்து இருக்கிறது . இதனைத் தொடர்ந்து கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உலகக் கோப்பை காண இந்திய அணியில் இடம் பெறுவார்களா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சிகர்களுக்கு எழுந்திருக்கிறது .