சாய் சுதர்சன் செம்ம டேலன்ட்… கண்டிப்பா அடுத்தடுத்த மேட்ச்ல பிளேயிங் லெவன்ல இருக்கணும், ஹர்திக் பாண்டியாவுக்கு நல்லா தெரியும் – தமிழக வீரரை புகழ்ந்த டேவிட் மில்லர்.

0
350

சாய் சுதர்சன் இவ்வளவு இளம் வயதில் சிறப்பாக ஆட்டத்தை முடித்துக் கொடுக்கிறார். நல்ல டேலண்ட் இருக்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார் டேவிட் மில்லர்.

நேற்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

டேவிட் வார்னர்(37), அக்சர் பட்டேல்(36) மற்றும் சர்ப்ராஸ் கான்(30) ஆகியோரின நிதானமான ஆட்டத்தினால் டெல்லி அணி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் முகமது சமி, அல்சாரி ஜோசப் மற்றும் ரஷித் கான் ஆகிய பவுலர்கள் ஏற்படுத்தி வந்த தாக்குதலை பார்க்கையில் டெல்லி அணி 150 ரன்கள் கடப்பதே கடினம் என்ற சூழல் நிலவியது.

இறுதியில் அக்சர் பட்டேல் நன்றாக விளையாடி கொடுத்ததால், 162 ரன்கள் வரை எட்டியது. அதன் பிறகு பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு டெல்லி பவுலர்கள் நன்கு தாக்குதலை நடத்தி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அந்த இக்கட்டான சூழலில் உள்ளே வந்து மிகச் சிறப்பாக ஆட்டத்தை எடுத்துச் சென்றார் 21 வயதே ஆன தமிழக வீரர் சாய் சுதர்சன். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

கடைசி 30 பந்துகளில் கிட்டத்தட்ட 50 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் இருந்தபோது உள்ளே வந்த டேவிட் மில்லர், அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 31 ரன்கள் அடித்து பினிஷிங் செய்தார். போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த டேவிட் மில்லர் சாய் சுதர்சனை வானுயர பாராட்டியுள்ளார். டேவிட் மில்லர் கூறியதாவது:

“கடந்த சீசனில் சில போட்டிகளில் சாய் சுதர்சன் விளையாடிய போது பார்த்தேன். அப்போதும் சிறப்பாக ஆடினார். இப்போட்டியில் இன்னும் முதிர்ச்சியுடன் செய்து காட்டியிருக்கிறார். பயிற்சியின் போதும் தீவிரமாக பயிற்சி செய்வதை பார்க்க முடிந்தது. நல்ல டேலண்ட் கொண்ட பிளேயர்.

இவ்வளவு இளம் வயதில் போட்டியை முடித்துக் கொடுக்கக்கூடிய அளவிற்கு பொறுப்புடன் மற்றும் முயற்சியுடன் விளையாடக்கூடிய வீரர் அடுத்தடுத்த போட்டிகளில் கட்டாயம் அணியில் இருக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா அதைப் பார்த்துக் கொள்வார். அவருடைய இத்தகைய சிறப்பான ஆட்டத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.