இனி இந்திய டி20 அணியில் ரோகித், விராட் கோலி இல்லை – பிசிசிஐ தந்த அறிவிப்பால் அதிர்ச்சி!

0
10258

இனி டி20 பிளானில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோர் இல்லையா? பிசிசிஐ தரப்பிலிருந்து கசிந்த தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.

இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்று நாட்டிற்கு திரும்பும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அரை இறுதிப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து வெளியேறியதால் பெருத்த ஏமாற்றம் கிடைத்தது.

- Advertisement -

இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாது, பிசிசிஐ கடும் அதிருப்திக்கு உள்ளாகி, தோல்விக்கு பின் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ராகுல் டிராவிடம் இந்திய அணையில் மூத்த வீரர்களின் நிலை இனி எப்படி இருக்கும்? தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடுவார்களா? என கேட்கப்பட்டதற்கு, அவர் கொடுத்த பதில்களை பார்க்கையில் டி20 போட்டிகளில் சீனியர் வீரர்களுக்கு இடமிருக்காது என்பதைப்போல தான் இருந்தது.

மேலும் பிசிசிஐ தலைமை அதிகாரிகளில் ஒருவர், “இனி ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள பிசிசிஐ வகுத்து வரும் டி20 போட்டிகளுக்கான திட்டத்தில் இருக்க மாட்டார்கள். அதேநேரம் பிசிசிஐ யாரையும் ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தாது. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.” என தனது பேட்டியில் கூறினார்.

“2023 உலகக்கோப்பை வரவிருப்பதால் அடுத்த ஓராண்டுக்கு அதிக அளவில் ஒருநாள் போட்டிகள் இருக்கும். டி20 போட்டிகள் பெரிதாக இருக்காது என்பதால், ஆனாலும் அதில் சீனியர் வீரர்களை நம்மால் பார்க்க முடியாது. அதிக அளவில் இளம் வீரர்களே இடம்பெறுவர். அதைப் பொறுத்து 2024 ஆம் ஆண்டு டி20 உலககோப்பைக்கு திட்டங்கள் வகுக்கப்படும்.” என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

- Advertisement -

இதனைவைத்துப் பார்க்கையில் டி20 போட்டிகளில் இனி முழுக்க முழுக்க இளம் பட்டாளத்தை களமிறங்கி பிசிசிஐ அதிரடி திட்டங்களை செயல்படுத்த உள்ளது என்று தெரிகிறது.