CWC.. ஆஸி வெற்றி.. பாகிஸ்தானுக்கு லக்.. ஆப்கானுக்கும் தொடரும் அரை இறுதி வாய்ப்பு.. முழு விவரம்

0
3084

இன்று மும்பையில் நடைபெற்ற நடப்பு உலக கோப்பை தொடரின் 39-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. மற்றொருபுறம் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் வீரர் இப்ராஹிம் ஜத்ரான் மிகச் சிறப்பாக விளையாடி 129 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் ரசித் கான் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 291 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது.

- Advertisement -

எனினும் அந்த அணியின் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் கிளன் மேக்ஸ்வெல் இருவரும் இணைந்து 8-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 202 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 10 சிக்ஸர்களும் 21 பௌண்டரிகளும் அடங்கும்.

இந்த தோல்வியின் மூலம் ஆப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்கா அணியுடன் வருகின்ற 10ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் வெற்றி பெற்றாலும் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு அந்த அணியின் நெட் ரன்ரேட் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை விட குறைவாக இருக்கிறது. மேலும் மைனஸிலும் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி அர இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் எவ்வாறு இருக்கிறது என்று பார்ப்போம்.

உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் விளையாட்டு ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது. அந்த அணி தங்களது துவக்க போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இந்திய அணியுடன் தோல்வி அடைந்தாலும் அதன் பிறகு பாகிஸ்தான் இங்கிலாந்து ஸ்ரீலங்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை உருவாக்கியது. எனினும் இன்றைய ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வி அந்த வாய்ப்பை கேள்விக்குறியாகி இருக்கிறது.

- Advertisement -

தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் அந்த அணி ஆப்பிரிக்கா அணியுடன் நடைபெற இருக்கும் போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும். ஆப்கானிஸ்தான் அணியைத் தவிர நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா அணியுடன் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நல்ல ரென்ற வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் இலங்கை நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இங்கிலாந்து போட்டிகளை சார்ந்து இருக்க வேண்டும். இந்தப் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தோல்வியடைந்து தென் ஆப்பிரிக்கா அணியுடன் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி அரை இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வி ஆப்கானிஸ்தானின் அரையிறுதி போட்டிக்கான தகுதிகளை சிறிது பாதித்திருந்தாலும் அந்த அணிக்கு அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது.