“பிளேயிங் லெவன் எப்படி தேர்வு செய்யப்படுகிறது என செலெக்டர்ஸ் கேப்டனை கேள்வி கேட்க வேண்டும்” – இந்திய அணியின் முன்னாள் வீரர் பரபரப்பு பேச்சு!

0
291

இந்திய அணியின் புதிய தேர்வு குழு தலைவராக முன்னாள் ஆல் ரவுண்டர் அஜித் அகர்தர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் . கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஸ்டிரிங் ஆப்ரேஷனை தொடர்ந்து தேர்வு குழு தலைவராக இருந்த சேட்டன் சர்மா பதவி விலகினார் .

அதனைத் தொடர்ந்து புதிய தேர்வு குழு தலைவர் பதவிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் டெல்லி கேப்பிட்டல் அணியின் துணை பயிற்சியாளர் அஜித் அகர்க்கர் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

உலகக்கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக அஜித்தகர் தேர்வு செய்யப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த வருடம் டி20 உலக கோப்பை நடக்க இருப்பதால் அதற்கான அணி வீரர்களையும் தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பும் அஜித் அகற்கருகே இருக்கிறது. இந்நிலையில் அஜித் அகர்க்கர் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக மேற்கிந்திய தீவுகளில் நடைபெற இருக்கும் டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தார். அந்த அணியில் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோர் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர் .

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அணியில் விளையாடும் 11 பேரைப் பற்றிய விவரங்களையும் அது தொடர்பான கேள்விகளையும் தேர்வு குழு தலைவர் அணியின் கேப்டனிடம் கேட்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது சேனலில் பேசியிருக்கும் அவர் ” ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சேர்க்கப்படவில்லை என்று தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேள்வி கேட்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார் .

அணி தேர்வு செய்வதில் அவரது தலையீடு இல்லை என்றாலும் ஒரு வீரரை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேட்பதற்கு தெரு குழு தலைவருக்கு உரிமை இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவதற்கும் வீரர் தேர்வு செய்யப்படாததற்கும் கேப்டன் காரணங்களை சொல்ல வேண்டும் என தெரிவித்த அவர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை என அகர்தர் கேப்டன் இடம் கேள்வி கேட்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசியவர் போட்டியின் முடிவுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்து தான் அந்தப் பதவியில் இருப்பவர்கள் மதிப்பீடு செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார் . நீங்கள் பயிற்சியாளராக இருக்கும்போது உங்கள் அணி எவ்வாறு விளையாடுகிறது என்பதை பொறுத்து நீங்கள் நல்ல பயிற்சியாளராக இல்லையா என்பது முடிவு செய்யப்படும். அதுபோல நீங்கள் தேர்வு செய்யப்படும் அணி நன்றாக விளையாடுவதை பொருத்து தான் உங்களது தேர்வின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று மதிப்பீடு செய்யப்படுவீர்கள் எனவும் தெரிவித்திருக்கிறார் .