ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் சர்துல் தாகூர் இருவரையும் தேர்வு செய்யாதது ஏன்? என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு நேரடியாக முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் மிதவேக பந்துவீச்சு இளம் ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டியை தேர்வு செய்தது குறித்தும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார். தற்பொழுது இந்த இளம் வீரரை அவசரமாக தேர்வு செய்தது குறித்து வெளியில் இருந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி உறுதியாக சேர்க்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியில் பரவி வந்தன. இந்த தகவல்கள் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரை கோபப்படுத்தி இருக்கிறது.
மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு ஹர்திக் பாண்டியா மற்றும் சர்துல் தாகூரை தேர்வு செய்யாதது ஏன் என மிகவும் கடுமையான முறையில் கேள்வி எழுப்பி இருந்தார். இதில் சர்துல் தாகூர் தற்பொழுது முழு உடல் தகுதியுடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவே விமர்சனங்களை உருவாக்கியது.
இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் அஜித் அகர்கர் கூறும் பொழுது “உங்களுக்கு தற்பொழுது ஹர்பஜன்சிங் போல ஒரு ஆல் ரவுண்டர் தேவையாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு இப்பொழுது நிதீஷ் குமார் ரெட்டியை தவிர வேறு வழி கிடையாது.ஹர்திக் பாண்டியா மற்றும் சர்துல் தாகூர் எங்கே போனார்கள் என்றால் அவர்களை நாங்கள் குறுகிய வடிவ கிரிக்கெட்டுக்காக வைத்திருக்கிறோம்”
“எங்களுக்கு ஹர்திக் பாண்டியா போல ஒரு வீரர் எல்லா வடிவத்திலும் தேவைப்பட்டார். நாங்கள் இதற்காக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சர்துல் தாகூர் மீது முதலீடு செய்து வந்தோம். ஆனால்இப்போது அவர் எங்களுக்கு தேவைப்பட்ட வகையில் இல்லை. இதன் காரணத்தால் நிதீஷ் குமாரை தேர்வு செய்திருக்கிறோம்”
இதையும் படிங்க : இந்திய கேப்டன்களை தப்பா பேசிய.. சஞ்சு சாம்சனின் அப்பா மன்னிப்பு கேட்க வேண்டும் – ஆஸி பிராட் ஹாக் பேட்டி
“இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் கங்குலி அங்கும் எங்கும் ஆக சில ஓவர்கள் மிதவேக பந்துவீச்சை வீசி வந்தார். நாங்கள் நிதிஷ் குமார் ரெட்டியை அப்படி பயன்படுத்த நினைக்கிறோம். அவர் கங்குலியின் ரோலை செய்வார். அவர் ஒன்று இரண்டு விக்கெட்டை கைப்பற்றினால் அது எங்களுக்கு போனஸ் ஆக அமையும்” என்று கூறி இருக்கிறார்.