தோனி உள்ளிட்ட இந்திய லெஜெண்ட் வீரர்கள் பற்றி குற்றம் சாட்டிய சஞ்சு சாம்சன் இன் தந்தை அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியிருக்கிறார்.
சஞ்சு சாம்சனின் தந்தை கடந்த வாரத்தில் தன்னுடைய மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சேர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக வீணடித்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பிராட் ஹாக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
கம்பீர் மற்றும் சூரிய குமாருக்கு நன்றி
சஞ்சு சாம்சனின் தந்தை இந்த நால்வர் தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை வீணடித்து விட்டதாக பேசிவிட்டு, புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரும் பெரிய உதவி செய்திருக்கிறார்கள் என்று நன்றி தெரிவித்தார். தன்னுடைய மகன் மிகவும் மன உறுதி கொண்டவன் என்பதால் இவர்கள் செய்ததிலிருந்து மீண்டு வந்து விட்டான் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து பேசிய பிராட் ஹாக் கூறும் பொழுது ” தோனி விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தன் மகனுடைய கிரிக்கெட் வாழ்க்கையை 10 வருடம் வீணடித்து விட்டதாக வெளியில் வந்து சஞ்சு சாம்சனின் தந்தை பேசுவது, அவர்கள் எந்த நிலையில் இருக்க விரும்பினார்களோ அதற்கு சரியானதாக இல்லை. இவர்கள் நால்வரும் இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய பெயர்கள் பெரிய வெற்றி பெற்றவர்கள்”
சஞ்சு சாம்சன் தந்தை மன்னிப்பு கேட்க வேண்டும்
மேலும் பேசிய பிராட் ஹாக் கூறும் பொழுது “சஞ்சு சாம்சன் சிறந்த வீரர். அவர் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்தார். பிறகு மீண்டும் ஒரு சதம் அடித்து தன்னுடைய இடத்தை இந்திய அணியில் உறுதி செய்திருக்கிறார். இப்படியான நிலையில் அவரது குடும்பத்தாரிடம் இருந்து வரும் இப்படியான கருத்துக்கள் அவருக்கு நன்மையை உண்டாக்காது. மாறாக அழுத்தத்தையே உண்டாக்கும். இதற்காக சஞ்சு சாம்சன் தந்தை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது சஞ்சு சாம்சனுக்கு நன்மை பயக்கும்”
இதையும் படிங்க : கம்பீர் டீம் ஏன் இப்படி பண்ணுது?.. நாங்க ஐபிஎல்-லயே இவங்க எல்லாத்தையும் பாத்துட்டோம் – ஹேசில்வுட் பேச்சு
“தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்கிறார். இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு தற்பொழுது நிறைய வீரர்கள் திறமையுடன் வரிசையில் காத்திருக்கிறார்கள். இப்படியான நிலையில் செயல் திறனில் பெரிய அளவில் வெளிப்பட்டால் மட்டுமே இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும். தேர்வாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் கட்டுப்படுத்த முடியாது. எனவே வாயை மூடிக் கொண்டு நமது பேட்டை பேச விட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






