நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறித்து இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் விமர்சனத்தை கூறியிருக்கிறார்.
தற்போது ஐந்து போட்டிகளில் விளையாடியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டு வருகிறது.
லக்னோவிடம் சிக்கிய ராஜஸ்தான்
ராஜஸ்தான் கடைசி போட்டியில் லக்னோ அணியிடம் பவர் பிளேவிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான தோல்வியை சந்தித்தது. பிறகு ஜடேஜா மற்றும் பெரேரா இருவரும் சேர்ந்து கௌரவமான ஸ்கோருக்கு அணியை அழைத்துச் சென்று ரன் ரேட்டை காப்பாற்றினார்கள்.
அந்த அணிக்கு டாப் ஆர்டர்கள் ஜெய்ஸ்வால் சூரியவன்சி மற்றும் ஜுரல் மூவர் மட்டுமே முக்கிய வீரர்களாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்து வரக்கூடியவர்கள் பெரிய அளவில் ரன் எடுக்காதது அந்த அணிக்கு பிரச்சனையாக மாறி உள்ளது.
ஜடேஜா மேட்ச் வின்னர் இல்லை
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும்போது ” தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சிறப்பாக விளையாடக் கூடியவர்களாக டாப் ஆர்டரில் இருக்கும் மூன்று பேர் மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு யாரும் நல்ல பார்மில் கிடையாது. ஜடேஜா அனுபவமுள்ள வீரர்தான். ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் போட்டியை வென்று தரக்கூடிய அளவில் இல்லை”
இதையும் படிங்க : ஆயுஸ் மத்ரே ஏற்கனவே கட்டோட இருந்தார்.. அவரை களத்தில் இப்படித்தான் சிஎஸ்கே நடத்துவீங்களா? – அஸ்வின் கோபம்
“இதனால் டாப் ஆர்டர்கள் தோல்வியடைந்தால் அடுத்து வரக்கூடியவர்கள் யாராவது பொறுப்பேற்று ரன் எடுக்க வேண்டும். கடந்த போட்டியில் விக்கெட்டுகள் நிறைய விழுந்த பிறகு எடுக்கப்பட்ட ரன்கள் வெறும் சம்பிரதாயம் மட்டுமே. அது வெற்றிக்காக எடுக்கப்பட்ட ரன்கள் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.






