நேற்று சிஎஸ்கே இளம் வீரர் ஆயுஸ் மத்ரேவை களத்தில் சிஎஸ்கே மருத்துவக் குழு சரியாக நடத்தவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் காலில் தசை பிடிப்பு போல ஏதோ உருவாக ஆயுஸ் மத்ரே களத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் இருந்தார். ஆர் சி எஸ் கே பிசியோ அவரை தொடர்ந்து விளையாட சொன்னார். அவர் அடுத்து சந்தித்த பந்திலேயே உடனே ஆட்டம் இழந்தார்.
மோசமான நடவடிக்கை
ஆயுஸ் மத்ரே தொடர்ந்து சில போட்டிகளாக களத்திற்கு பீல்டிங் செய்ய வராமல் வெளியில் அமர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஏற்கனவே ஏதோ பிரச்சனை இருந்திருக்கிறது. அதை சிஎஸ்கே மருத்துவக் குழு சரியாக கண்காணிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்றைய போட்டியிலும் கூட அவர் வெளியில் அமர்ந்திருந்து பேட்டிங் செய்ய மட்டுமே வந்தார். இத்துடன் அவருக்கு காலில் கட்டு பெரிய அளவில் போடப்பட்டிருந்தது. இதை வைத்துப் பார்க்கும் பொழுது அவரை விளையாட வைத்திருக்கக் கூடாது என்று தெரிகிறது.
இது தவறானது
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “ஆயுஸ் பேட்டிங் செய்ய வரும்போது முழங்காலில் கட்டுடன்தான் வந்தார். அது தசைப் பிடிப்பாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவர் கடந்த போட்டியிலும் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக கவனித்து சரி செய்ய வேண்டும். அதுதான் இஞ்சுரி மேனேஜ்மென்டின் வேலை”
இதையும் படிங்க : அந்த ரெண்டு ஓவர் மட்டும் கொஞ்சம் ரன் வந்து இருந்தா.. மீதி எட்டு ஓவர்ல சும்மா ஜெயிச்சிருப்போம்.. மோசம் பண்ணிட்டாங்க – ருதுராஜ் வருத்தம்
“அவர் களத்தில் நோண்டியபடி இருக்கிறார்; உங்களுடைய பிசியோதெரபிஸ்டுகள் வந்து பரிசோதிக்கிறார்கள். அதற்குப் பிறகும் அவரை விளையாட வைத்து ரன் ஓட வைக்கிறீர்கள். இது பெரிய காயமாக மாறினால் அவர் அடுத்த ஆறு வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது. எப்படி வீரர்களை இவ்வளவு அலட்சியமாக கையாள முடிகிறது?” என்று கூறியிருக்கிறார்.






