தோனியை விட ரகானேதான் ஃபிட்டா இருக்கார்.. இதான்பா காரணம் – சேவாக் பேட்டி

0
126
Sehwag

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பொழுதும் அனுபவ வீரர்களை அதாவது 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களை அதிகமாக கொண்டிருக்கும் அணியாக இருக்கும். இதன் காரணமாக அந்த அணியை எப்பொழுதும் வயதானவர்களின் அணி என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி 42 வயதில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அதிக வயதானவராக ரகானே 35 வயதில் விளையாடுகிறார். மேலும் ரவீந்திர ஜடேஜாவுக்கும் 35 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிக எளிதான வெற்றியை பெற்றது. இதற்கு அடுத்து மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராகவும் எளிதான வெற்றியை பெற்றது. மொத்தமாக அந்த அணியை எடுத்துக் கொண்டால் மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

கடந்த இரண்டு போட்டிகளிலும் ரகானே விராட் கோலி மற்றும் டேவிட் மில்லர் இருவருக்கும் மிகச் சிறப்பான இரண்டு கேட்ச்களில் பங்கெடுத்தார். அவருடைய துடிப்பான பீல்டிங் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு பெரிய ஊக்கத்தை கொடுப்பதாக அமைந்திருந்தது. இதேபோல் இரண்டாவது போட்டியில் விஜய் சங்கருக்கு விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி டைவ் அடித்து ஒரு சிறப்பான கேட்ச் பிடித்திருந்தார்.

- Advertisement -

இந்த போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டிருந்த வீரேந்திர சேவாக் மகேந்திர சிங் தோனியை குறிப்பிடும் பொழுது வயதானவர் என்று கூறினார். இதற்கு உடன் வர்ணனையில் ஈடுபட்டு வந்த ரோகன் கவாஸ்கர் தோனியை மட்டும் ஏன் வயதானவர் என்று கூறுகிறீர்கள் ரகானே இருக்கிறாரே என்று கேள்வியை முன் வைத்தார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 3 வருஷத்துக்கு மேல நடக்காதுனு சிஎஸ்கேவுக்கு விளையாடினவர் சொன்னார் – அஸ்வின் சுவாரசியமான தகவல்

இதற்கு விளக்கம் அளித்த சேவாக் பேசும் பொழுது “கேட்சுகள் மேட்ச் வெற்றி பெறுவதற்கு முக்கியமான விஷயம். ரகானே மற்றும் ரச்சின் இருவரும் சிறப்பான கேட்ச் பிடித்தார்கள். வயதான தோனி கூட நல்ல கேட்ச் பிடித்தார். தோனி உடன் ஒப்பிடும் பொழுது ரகானாவுக்கு 35 வயது தான் ஆகிறது. அவர் அவரை விட இளமையாகவும், அதிக உடல் தகுதி கொண்டவராகவும் இருக்கிறார். 40 வயதில் தொடக்கத்தில் இருப்பவருக்கும், 30 வயதில் தொடக்கத்தில் இருப்பவருக்கும் உடல் ரீதியாக நிறைய வித்தியாசம் இருக்கிறது. தற்பொழுது தோனிக்கு தெளிவாக வயதாகி இருப்பதும் அவர் உடல் திறன் குறைவாக இருப்பதும்” தெரிகிறது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -